Bigg Boss Tamil 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற ரியாலிட்டி ஷோக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அதே போல் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக போய்க்கொண்டு வருகிறது. அந்த வகையில் 88 நாட்களை கடந்த நிலையில் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக விளையாடி வருகிறார்கள்.
இந்த வாரம் முழுவதும் நேரடியாக பைனலுக்கு போகக்கூடிய வாய்ப்பாக டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒன்பது போட்டிகள் நடைபெற்றிருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் பாயிண்டுகள் எடுத்து வந்த நிலையில் கடைசியாக மைனஸ் பாயிண்டுகளையும் வாங்கி சில போட்டியாளர்கள் பாய்ண்டுகளே இல்லாமல் ஜீரோ பாயிண்ட்களில் இருக்கிறார்கள்.
அந்த வகையில் போட்டி ஆரம்பித்ததில் இருந்து விறுவிறுப்பாக விளையாடிய முத்து, ராணவ், விஷால், தீபக், மஞ்சரி மற்றும் ரயான். இதில் பார்க்கும் பொழுது முத்து எப்படியும் வெறித்தனமாக விளையாடி டிக்கெட் டு பினாலே கைப்பற்றி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் மஞ்சரி வைத்த ஒரு செக் மொத்த கேமையும் தலைகீழாக திருப்பிப் போட்டு விட்டது.
மஞ்சரிக்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கை ரயானிடம் கொடுத்தார். அவருக்கு பாய்ண்ட் கிடைக்கிறது என்பதற்காக தலையில் கலரிங் அடித்து இரண்டு புள்ளிகளை பெற்று தற்போது 21 பாயிண்ட்களைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவதாக மஞ்சரி மற்றும் முத்து 16 பாய்ண்டுகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறார்கள்.
அடுத்ததாக சௌந்தர்யா மற்றும் தீபக் 14 பாயிண்டுகளை எடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார்கள். ராணவ் 11 புள்ளிகளை எடுத்திருக்கிறார். ஆனால் இதில் எந்த புள்ளிகளையும் பெறாமல் ஜீரோ பாய்ண்ட்களில் இருப்பது நான்கு போட்டியாளர்கள். அவர்கள் யார் என்றால் அருண், ஜாக்குலின், பவித்ரா மற்றும் விஷால். அத்துடன் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதால் மஞ்சரி மற்றும் விஷால் வெளியே போக வாய்ப்பு இருக்கிறது.