வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

மன அழுத்தத்தை குறைக்க வரும் குக் வித் கோமாளி சீசன் 5.. வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ

Cook with Comali season 5: இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி புதுப்புது நிகழ்ச்சிகளையும், வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களையும் விஜய் டிவி தொடர்ந்து நடத்தி வருகிறது. முக்கியமாக பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பார்கள். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி டென்ஷனை ஏற்றும் விதமாக சண்டை சச்சரவாக இருக்கும்.

இன்னொரு பக்கம் குக் வித் கோமாளி மன அழுத்தத்தை குறைக்கும் காமெடி நிகழ்ச்சிகளாக இருக்கும். ஆனால் இந்த இரண்டுமே மக்கள் விரும்பி பார்த்து வருவார்கள். அந்த வகையில் வருகிற 27ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி துவங்கப் போகிறது.

வழக்கம் போல் இதை தொகுத்து வழங்குவதில் ரக்சன் வந்திருக்கிறார். ஆனால் கூடவே நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக மணிமேகலையும் இணைந்திருக்கிறார். அத்துடன் நடுவராக இதுவரை வழிநடத்தி வந்த செஃப் வெங்கடேஷ் பட் இந்த முறை விலகிவிட்டார். இவருக்கு பதிலாக மதம்பட்டி ரங்கராஜ் வருகிறார். அந்த வகையில் செஃப் தாமுடன் இணைந்து பணியாற்றப் போகிறார்.

என்டரி கொடுக்கப் போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்

இந்த நிலையில் சமைக்கக்கூடிய போட்டியாளர்களின் லிஸ்ட் வெளியாயிருக்கிறது. ஏற்கனவே இர்ஃபான், வசந்த்வாசி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் தேவா வருகிறார்கள் என்பதை நாம் பார்த்து விட்டோம். அடுத்ததாக ஷாலின் சோயா, இவர் சமீபத்தில் வெளிவந்த கண்ணகி படத்தில் நடித்திருக்கிறார் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருக்கிறார்.

அடுத்ததாக சீரியல் ஆக்டர் அக்ஷய் கமல். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்ற இந்திரா சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். அடுத்து திவ்ய துரைசாமி. இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவின் தங்கையாக நடித்திருக்கிறார்.

இவரை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் மூத்த மருமகளாக நடித்த சுஜிதா கலந்து கொள்ளப் போகிறார். அடுத்ததாக சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சியில் பங்கேற்ற பூஜா வெங்கட் இதில் போட்டியாளராக வரப் போகிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட 10 போட்டியாளர்கள் உறுதியாகிவிட்டார்கள். இனி ஒவ்வொரு வாரமும் களைகட்ட போகிறது.

Trending News