வியாழக்கிழமை, நவம்பர் 21, 2024

உலகின் டாப் 10 பணக்காரர்கள் லிஸ்ட்.. நம்பர் 1 இடத்தில் யார் தெரியுமா? அவர அடிச்சுக்க முடியுமா பாஸ்

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், எல்லோருக்கும் தெரிந்த பிரபல நபர் தான் முதலிடம் பிடித்துள்ளார். அவர் யார்? அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள பணக்காரர்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம்.

உலகில் பணக்காரர்களும் வாழ்கிறார்கள், ஏழைகளும் வசிக்கிறார்கள். ஆனால் பணக்காரர்களாக உருவாகுவதும் பேர் வாங்குவதும் அவர் வணிகத்தின் லாபத்தைப் பொருத்து என்றாலும் கூட அப்படி பணக்காரர்கள் ஆவதற்காக அவர்களுக்குப் பின்புலமாக ஏழைகளும் தொழிலாளர்களும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

புளூம்பெர்க் நிறுவனத்தின் பட்டியல்

ஏழைகள் தங்கள் வாழ்தாரத்திற்கு உழைப்பதாக இருந்தாலும், பணக்காரர்கள் பலருக்கு வேலை வாய்ப்பும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தங்கள் தொழிலின் மூலம் உதவுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில், உலகின் முய்தல் 10 பெரும் பணக்காரர்களின் பட்டியலை அமெரிக்காவின் புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முதலிடத்தில் எலான் மஸ்க்

அதில், எல்லோருக்கும் பரீட்சயமானவரும், எக்ஸ் மற்றும் ஸ்பேக் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது வணிகச் செயல்பாடுகள், முதலீடுகள் காரணமாக முதலிடம் பிடித்துள்ளார். இவரது மொத்தச் சொத்து மதிப்பு என்பது 24,590 கோடி டாலர்கள் என்று தெரிகிறது.

மெட்டா மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜூகர் பெர்க் 2 வது இடம் பிடித்துள்ளார். டாப் பணக்காரர்கள் ஐந்து இடங்களுக்கு கீழாக இருந்து வந்த மார்க் ஜூகர் பெர்க் இந்த ஆண்டு 2 வது இடம் பிடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைவரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

அதாவது, அவரது இன்ஸ்டா, பேஸ்பு, வாட்ஸ் ஆப் ஆகிய சமூக ஊடகங்களில் சுமார் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருக்கும் நிலையில், மெட்டாவின் சந்தை மூலதனம் 1,255 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனம் உலகின் 7 வது பெரிய நிறுவனமாக உள்ளது.

இதையடுத்து, தொடர்ந்து பல ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெகாஸ் 3 வது இடம் பிடித்துள்ளார். இவரது மொத்தச் சொத்து மதிப்பு 20,740 கோடி டாலர்களாக உள்ளது. 4வது இடத்தில் LVMH நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஒ பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டில் எலான் மஸ்கை முந்தி, இப்பட்டியலில் சில மாதங்கள் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

elon musk

எலான் மஸ்குக்கு குவியும் பாராட்டுகள்

சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு, தனது சொந்த முயற்சி மற்றும் உழைப்பின் மூலம் கஷ்டப்பட்டு தொழிலபதிராகி அதிலும் வெற்றி பெற்று இன்று உலகம் அறிந்த பிரபலமாகவும் உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராகவும் இருந்த எலான் மஸ்க் இன்று உலகின் டாப் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த இடத்திற்கு அவர் பொருத்தமானவர் என பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News