வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரஜினியின் 170 ஆவது படத்தின் டைட்டில் இதோ.. நிறைவேற போகும் சூப்பர் ஸ்டாரின் கனவு

Actor Rajini: தன் உன்னதமான ஸ்டைலாலும், நடிப்பாலும் மக்கள் நெஞ்சில் நீங்காத இடத்தை பிடித்து இன்றும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பட்டைய கிளப்பும் முக்கிய பிரபலம் தான் ரஜினிகாந்த். இந்நிலையில் இவரின் 170 ஆவது படத்தின் டைட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்பொழுது ரஜினியின் 169வது படமான ஜெயிலர் இம்மாதம் 10ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், தற்பொழுது அடுத்த கட்ட படங்களில் ரஜினி ஆர்வம் காட்டி வருகிறார்.

Also Read: கணவரின் குடும்பத்தால் குடி போதைக்கு அடிமையான நடிகை.. 600 படங்களில் நடித்தும் கழட்டிவிட்ட கணவர்

அவ்வாறு ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் உடன் இணைந்து ரஜினி தனது 170வது படத்தினை மேற்கொண்டு வருகிறார். மேலும் இப்படத்திற்கான லுக் டெஸ்ட் எடுக்க ரஜினிக்கு அழைப்பு வந்தது.

அதைத்தொடர்ந்து இந்தியாவில் முதன்மை ஹேர் ஸ்டைல் செய்பவரை வைத்து போலீஸ் கெட்டப் செய்ய முடிவு எடுத்துள்ளனர். மேலும் போலீஸ் கதாபாத்திற்கு ஏற்றவாறு அந்த கெட்டப்பும் அருமையாக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: விஜய்க்கு செய்யாததை ரஜினிக்காக செய்த அனிருத்.. ஹைப்பை ஏற்றிய ஜெயிலர்

இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளிவராது, சஸ்பென்ஸ் ஆக இருந்த நிலையில் தற்போது இப்படம் வேட்டையன் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் இந்த டைட்டிலை ஏற்கனவே இன்னொரு இயக்குனர் வின்சென்ட் செல்வா தன் படத்திற்கு வைத்து விட்டதாக கூறப்படும் நிலையில் இது எப்படி சாத்தியம் என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஏற்கனவே சந்திரமுகி இல் வேட்டையன் கதாபாத்திரம் ஏற்ற ரஜினி இந்த பெயரில் படம் ஒன்று பண்ண வேண்டும் என்ற ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வின்சென்ட் செல்வா, தான் மேற்கொள்ளும் படத்திற்கு வைத்தது சற்றுக் குழப்பங்களை ஏற்படுத்தினாலும், இந்த இயக்குனரை பொறுத்தவரை மிகவும் மென்மையானவர் ஆகையால் ரஜினி படத்திற்கு டைட்டில் வேணும் என கேட்டால் போதும் உடனே கொடுத்து விடுவார். ஆக மொத்தத்தில் ரஜினியின் கனவான அடுத்த படம் வேட்டையன் என ரசிகர்கள் கொண்டாட தொடங்கி விட்டனர்.

Also Read: சுரேஷ் ரெய்னா இடத்தை பிடிக்க வந்த சூறாவளி.. பவுலர்களே உஷார் அந்த பையன் கிட்ட பயமில்லை

Trending News