சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நடிகையின் தோழியை கரெக்ட் செய்த ஹீரோ.. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ஹீரோயின்

ஹீரோ ஒருவருடன் நடிகை இரண்டு, மூன்று படங்களின் சேர்த்து நடித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் நடிகைக்கு அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு வாங்கி கொடுத்ததும் இந்த ஹீரோ தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

மேலும் நடிகரை வளைத்து போட்டு தான் நடிகைக்கு வாய்ப்புகள் வருவதாகவும் கூறி வந்தனர். ஆனால் இப்போது தனக்கு தானே சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டு உள்ளார் நடிகை. அதாவது தன்னுடைய படப்பிடிப்புக்கு எப்போதுமே நடிகை தோழியை அழைத்து வந்துள்ளார்.

இதன் காரணமாக நடிகையை காட்டிலும் தோழியுடன் ஹீரோ நெருக்கமாக பழகி உள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நட்பாக தான் பழகி வருகிறார்கள் என்று நடிகை நினைத்து சர்வ சாதாரணமாக விட்டு விட்டார். ஆனால் அதன் பிறகு நடிகைக்கே ஆப்பு வைக்கும்படி சம்பவம் அரங்கேறி இருந்துள்ளது.

Also Read : கடுப்பில் போனை கட் செய்த ஹீரோ.. விரத்தியில் கிரஷ் நடிகை

அதாவது நடிகையிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ விலகிவிட்டாராம். அதோடு மட்டுமல்லாமல் நடிகையின் தோழிக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுக்க ஆரம்பித்து விட்டார். நடிகை உச்சகட்ட கோபமாகி தோழியை கண்டபடி திட்டி உள்ளார்.

இதை தோழியோ ஹீரோவிடம் சொல்லிவிட நடிகைக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று தனது செல்வாக்கு மூலம் பட வாய்ப்பை தடுத்துவிட்டாராம். இதனால் இப்போது பிழைப்புக்கு என்ன செய்வதென்று தெரியாமல் நடிகை திண்டாடி கொண்டிருக்கிறார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல இப்போது தோழியை ஹீரோவுடன் பழக விட்டது தவறு என புலம்பி கொண்டிருக்கிறார்.

Also Read : பொட்டி பாம்பாய் அடங்கிய ஹீரோ.. காரியத்தை சாதித்துக் கொண்ட மனைவி

Trending News