தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதையும் தாண்டி ஹீரோக்கள் ஹீரோயின்களின் கன்னங்களை கிள்ளுவது, முடியை வருடி விடுவது போன்ற காட்சிகளை மட்டும் தான் நாம் பார்த்துள்ளோம்.
ஆனால் தமிழ் இயக்குனர்கள் ஹீரோ ஹீரோயின்களை ரொமான்ஸ் செய்யும் காட்சிகளை வித்தியாசம் வித்தியாசமாக எடுத்துள்ளனர். யார் யார் அந்த சேட்டைகளை செய்துள்ளார் என்பதை பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் வாசுவின் படத்தில் ரொமான்ஸ்க்கு பஞ்சமே இல்லை என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இவர் படத்தில் தான் வித்தியாச வித்தியாசமாக பல ரொமான்ஸ் காட்சிகளை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டி இருப்பார்.
லவ் பேர்ட்ஸ்: இதுவரைக்கும் பல பேர் ஆம்லெட்டை தோசைக் கல்லில் தான் போட்டுள்ளனர். ஆனால் வாசு மற்றும் வித்தியாசமாக பிரபுதேவாவை வைத்து நக்மா வயிற்றில் ஆம்லெட் போட்டு இப்படியும் ஆம்லெட் போட முடியும் என வித்தியாசமாக எடுத்துக்காட்டினார்.

சின்ன கவுண்டர்: விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் சின்ன கவுண்டர் இப்படத்தில் சுகன்யா, மனோரமா, செந்தில் மற்றும் கவுண்டமணி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் சுகன்யாவிற்கு பம்பரம் போட்டி வைக்கப்படும். அதில் விஜயகாந்த் வெற்றி பெற்றதால் சுகன்யா தொப்புளில் சுற்றி பம்பரம் விடுவார்.

வள்ளல்: சத்யராஜ், மீனா, ரோஜா, கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வள்ளல். இப்படத்தில் இடம் பெற்ற பாடலில் சத்யராஜ் ரோஜாவின் தொப்புளில் தேனை ஊற்றுவது, திராட்சைப் பழங்களைப் போட்டு வித்தை காட்டுவது போன்ற அளவில்லாத சேட்டைகள் செய்திருப்பார்.

இளமை ஊஞ்சல்: விஜயகுமார், டிபி கஜேந்திரன், சிவானி குரோவர், கீர்த்தி சாவ்லா, நமிதா மற்றும் மேக்னா நாயுடு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இளமை ஊஞ்சல். இப்படத்தில் 4 இளைஞர்கள் மற்றும் 4 பெண்கள் வைத்து கதை நகரும். இந்த படத்திலும் சின்னக்கவுண்டர் படத்தில் எடுக்கப்பட்டது போலவே காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
