திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிரியா பவானி சங்கருக்கே ரூட் போடும் இயக்குனர்.. வேளில போற ஓணானை வேட்டியில் விட்ட கதை ஆயிருமோ!

Priya Bhavani Shankar: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த பிரியா பவானி சங்கர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் இவர் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் தான் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரியா பவானி சங்கருக்கு பிரச்சனை அவருடைய உயரம் தான். அவருடைய உயரத்திற்கு சரியான ஹீரோ தேடுவது தான் சிக்கல்.

இதனால் தன்னைவிட உயரமான ஹீரோக்களுடன் தான் ஜோடி சேர்ந்து வருகிறார். இந்நிலையில் எஸ் ஜே சூர்யா உடன் பொம்மை என்ற படத்தில் கடைசியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இதற்கு முன்னதாக அவருக்கு ஹிட் கொடுத்த படம் அருண் விஜய்யின் யானை படம் தான்.

Also Read : வணங்கான் சூர்யாவுடன் கூட்டணி போடும் அருண் விஜய்.. தெறிக்கவிடும் லேட்டஸ்ட் அப்டேட்

குடும்ப செண்டிமெண்ட் ஆக உருவான இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். அப்போதே தனது அடுத்த படத்திற்கும் இவர்தான் கதாநாயகி என்று புக் செய்து விட்டாராம். இதற்கு உடனடியாக பிரியா பவானி சங்கர் சம்மதம் தெரிவித்து விட்டார்.

இப்போது அவரின் உயரத்திற்கு ஏற்ற ஹீரோவை தான் ஹரி புக் செய்துள்ளாராம். அதாவது விஷால் தான் அடுத்ததாக ஹரியின் படத்தில் நடிக்க இருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. ஆனாலும் விஷால் பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

Also Read : இயக்குனரா புடிச்சாலும், தயாரிப்பாளரா மன்னிக்கவே மாட்டேன்.. அந்நியன் போல் ஆக்ரோசமாக மாறிய விஷால்!

அதாவது சூட்டிங் சரியான நேரத்திற்கு வர மாட்டார், சில சமயங்களில் சூட்டிங்கை தவிர்த்து விடுவார். தயாரிப்பாளருடன் தொடர்ந்து வாக்குவாதம் என அவர் மீது குற்றச்சாட்டை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் வேளியில் போற ஓணானை வேட்டியில் விட்ட கதையாக விஷாலை புக் செய்துள்ளார் ஹரி.

இயக்குனர் பாலாவுக்கு அடுத்தபடியாக படப்பிடிப்பில் திடீரென கோபம் படக்கூடியவர்தான் ஹரி. ஏற்கனவே பிரஸ் மீட்டில் கூட அடிக்கடி கோபப்பட்டு இருக்கிறார். இந்த சூழலில் விஷாலை வைத்து இவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் விரைவில் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Also Read : என்னது எனக்கும் மேனனுக்கும் கல்யாணமா.? பதறிப்போய் வதந்திக்கு பதிலடி கொடுத்த விஷால்

Trending News