Actor Vikram: பல வருடகணக்காய் இழுபறியாய் இருந்து வரும் படம் மக்களின் ஆர்வத்தை குறைக்கும் விதமாய் அமைந்துவிடும். தற்போது அதற்கு உதாரணமாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மேற்கொள்ளும் விக்ரம் படம் பல வருடங்களாக கிடப்பையில் போடப்பட்டு வருகிறது.
இவர் இயக்கத்தில் எண்ணற்ற படங்கள் வெற்றியைக் கண்டிருக்கும் நிலையில் தற்பொழுது நடிப்பையும் விட்டு வைக்காமல் படங்களில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து வெற்றியைக் கண்டு வருகிறார் கௌதம் மேனன். இருப்பினும் பல வருடங்களாக இவர் இயக்கத்தில் கிடப்பையில் இருந்து வரும் படம் தான் துருவ நட்சத்திரம்.
Also Read: சந்திரமுகி 2 வில் பட்டைய கிளப்பிய 3 நடிகர்கள்.. லைக்கா, வாசு என ஆச்சரியப்பட வைத்த சம்பவம்
தற்போது தான் இப்படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணத்தில் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு தூசி தட்டி எடுக்கப்பட்ட இப்படம் இந்த வருடமாவது வெளிவரும் என நம்பப்பட்ட நிலையில் மீண்டும் ட்ராப் அவுட் ஆனது. மேலும் இப்படத்தை லலித் வாங்கி ரிலீஸ் செய்யலாம் என்ற யோசனையில் இருந்து வந்தாராம்.
ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி படத்தை தயாரித்தவராம். இப்படம் தோல்வி அடைந்ததால் இவருக்கு 35 கோடி கடன் இருக்கிறதாம். அதிலிருந்து மீள முடியாமல் அந்த கடனை எல்லாம் தற்பொழுது துருவ நட்சத்திரம் படம் மேல் விழுந்து உள்ளதாம்.
Also Read: பல நாடுகளில் சகித்துக் கொள்ள முடியாத ஜெயிலர் படம்.. பெரிய பஞ்சாயத்தால் வந்த பிரச்சனை
எல்லாத்திற்கும் மேலாக இப்படத்தில் நடிப்பதற்கு விக்ரமிற்கும் துளி கூட இன்ட்ரஸ்ட் இல்லாதவாறு இருந்து வருகிறார். தன் அடுத்தக்கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வரும் இவர் தொடர்ந்து தடைப்பட்டு வரும் இப்படத்தை ஒரு பொருட்டாய் கருதாமல் இருந்து வருகிறார்.
இப்படம் எந்த நேரத்தில் ஆரம்பித்ததோ என்னவோ பல வருடங்களாக கிடப்பையில் இருக்கும் இதற்கு ஒரு தீர்வு இல்லாமல் முதற்கோணம் முற்றிலும் கோணமாய் இருந்து வருகிறது. இப்படத்தின் மீது இருந்த நம்பிக்கை முற்றிலும் குறைய தொடங்கி விட்டது என்று தான் கூற வேண்டும்.