வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எதுவுமே செட்டாகலன்னு வில்லன் அவதாரம் எடுக்கும் நடிகர்.. ஜெயம் ரவிக்கு எதிரியாய் உருவான குழந்தை ஹீரோ

ஆரம்பத்தில் வாரிசு நடிகர் ஒருவர் குழந்தை நட்சத்திரமாக 5, 6 படங்களில் தலை காட்டினார். 2007ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். ஆரம்பத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் ஓடினாலும் அதன் பிறகு நடிகரின் ஒழுங்கீன நடத்தையால் எல்லாம் பறிபோனது.

ரஜினி விஜயகாந்த், சரத்குமார் என பெரிய ஹீரோகளுக்கு பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பி வாசு. சின்ன தம்பி, நடிகன், மன்னன் என இன்றும் இவர் படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அப்படிப்பட்ட இயக்குனர் பி. பி. வாசு. இவரின் மகன் தான் சக்தி

சின்னதம்பி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் அதன்பின் செந்தமிழ் பாட்டு, ரிக்ஷா மாமா என சிறு வயது கதாபாத்திரத்தில் நிறைய படங்களில் நடித்தார் இவருக்கு ஹீரோவாக அடையாளம் தந்த முதல் படம் தொட்டால் பூ மலரும்.

அதன் பின் நினைத்தாலே இனிக்கும், ஆட்டநாயகன் என ஒரு சில படங்கள் கை கொடுத்தாலும், இவருக்கு சினிமா கேரியர் சிறப்பாக இல்லை. 2017 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டார். அதன் பின்பு கடைசியாக சிவலிங்கா படத்தில் தலை காட்டினார்.

சக்தி இப்போது அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் வில்லனாக கமிட்டாகி இருக்கிறார். டாடா பட இயக்குனர் கணேஷ் கே பிரபு இயக்க உள்ள அந்த படத்தில் தான் நடிக்கப் போகிறார். ஆனால் அவர் பார்ப்பதற்கு குழந்தை போல் இருப்பதால் இந்த கதாபாத்திரம் செட் ஆகுமா என்று தெரியவில்லை.

Trending News