வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

முடியினால் மணிரத்னம் பட வாய்ப்பு இழந்த மாஸ் ஹீரோ.. இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்

ManiRatnam: மணிரத்னம் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என டாப் ஹீரோக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவருடைய படத்தில் மட்டும் நடித்து விட்டால் அதன் பிறகு ஹீரோக்களின் கேரியர் எங்கேயோ போய்விடும். அதுவும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நிறைய பிரபலங்கள் நடித்திருந்தனர்.

அவர்கள் எல்லோருக்குமே சரியான அங்கீகாரம் கிடைத்தது. இந்த சூழலில் அடுத்ததாக கமலை வைத்து மணிரத்னம் ஒரு படம் இயக்க இருக்கிறார். இந்த படத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது.

Also Read : வசூலில் மிரள செய்யும் ஜெயிலர் படம்.. பொறுக்க முடியாமல் கமல், மணிரத்னம் என பஞ்சாயத்தை கூட்டும் ப்ளூ சட்டை

ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படத்திற்காக தனது தோற்றத்தை மொத்தமாக மாற்றி இருக்கிறார். நீண்ட முடி மற்றும் தாடி வளர்த்து உள்ளார்.

வெளிநாட்டுக்கு சென்று சில கலைகளையும் பயின்று வந்திருக்கிறார். இந்நிலையில் மணிரத்தினம் விரைவில் தன்னுடைய படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு கலெக்டர் கதாபாத்திரம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இதற்கு இவ்வளவு முடி இருந்தால் நன்றாக இருக்காது என மணிரத்தினம் எண்ணியிருக்கிறார்.

Also Read : வடிவேலுக்கும், பிரம்மானந்தாக்கும் கமல் வைத்த செல்ல பெயர்.. வயிறு வலிக்க சிரித்த உலக நாயகன்

ஆனால் விருப்பம் இல்லை என்றாலும் மணிரத்தினம் படத்தில் இருந்து சிம்பு விலகி விட்டாராம். ஏனென்றால் தேசிங்கு பெரியசாமி படத்தில் முக்கியமான கதாநாயகன் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் பல மாதங்களாக இந்த படத்திற்கு பயிற்சி எடுத்து வந்துள்ளதால் தேசிங்கு பெரியசாமி படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

இப்போது வரை மணிரத்னம் படத்தை தவறவிட்டதை நினைத்து சிம்பு வருத்தப்பட்டு வருகிறாராம். மேலும் சிம்பு நடிக்க இருந்த கலெக்டர் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறாராம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Also Read : ரஜினி, கமலுக்கு மட்டும் பச்சைக்கொடி.. சிம்பு, சூர்யா படம்னா தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் ஆப்பு

Trending News