சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஜாக்கி ஜான் கூப்டாகோ, மைக்கேல் ஜாக்சன் கூப்டாகோ.. கலர் கலரா ரீல் விட்டு இமேஜை காப்பாற்றும் ஹீரோ

டாப் நடிகர்களின் லிஸ்டில் வரவேண்டும் என்று ஒரு நடிகர் இப்போது கலர் கலராக ரீல் சுற்றி வருகிறார். அதுமட்டுமின்றி இப்போது உச்சகட்ட பண போதையில் அந்த நடிகர் உள்ளாராம். ஒரு காலத்தில் அன்றாட செலவுக்கு கூட காசு இல்லாமல் தனது அம்மா அப்பாவிடம் பணம் வாங்கி தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்.

ஏனென்றால் அப்போது அவர் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்ததால் பட வாய்ப்பு இல்லாமல் வருத்தப்பட்டு வந்தார். ஆனாலும் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி வந்திருந்தார். அப்போது தான் அந்த நடிகருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டியது. அதாவது திடீரென ஒரு படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது.

Also Read : அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு பகிரங்க மிரட்டல் விட்ட நடிகர்.. மறுத்ததால் நடிகைக்கு நேர்ந்த கதி

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருந்தது. அவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் ஆகி வருவதால் சம்பளத்தை பன்மடங்கு உயர்த்தி விட்டார். ஆனால் டாப் நடிகருக்கு இணையாக இவருக்கு சம்பளம் எப்படி கொடுப்பது என யோசனையில் இருந்துள்ளனர்.

இதற்காக இப்போது கலர் கலராக ரீல் சுற்றி வருகிறார். அதாவது ஜாக்கி ஜான் கூப்பிடாக, மைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக என்பது போல கையில் நாலைந்து இயக்குனர்களின் இருக்கிறார்கள் என பெரிய இயக்குனர்களின் பெயரைச் சொல்லி பந்தா காட்டி வருகிறாராம். ஆனால் இதெல்லாம் சும்மா புருடாவாம்.

வெளி உலகத்திற்காக இவ்வாறு பொய்களை அவிழ்த்து விட்டு வருகிறார். மேலும் பெரிய தயாரிப்பாளர்களின் படங்களை சமீப காலமாக அந்த நடிகர் இழந்துள்ளாராம். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இவ்வாறு புரளியை கிளப்பி விட்டு இன்பமாய் ஊர் சுற்றி வருகிறாராம்.

Also Read : கிளாமர் காட்டியும் பட வாய்ப்பு இல்லை.. 71 வயது நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கும் 32 வயது நடிகை

Trending News