புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து விலகும் ஹீரோ.. ஒழுங்கா தான போயிட்டு இருக்கு அதுக்குள்ள என்ன ஆச்சு

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்களில் சில சீரியல்கள் மட்டும் தான் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் குடும்பக் கதையும் கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் விதமாக கதை ஆயிரம் எபிசோடுக்கு மேல் வெற்றிகரமாக முடிந்தது. இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலும் முதல் பாகத்தை விட சூப்பராக இருக்கிறது என்று மக்களிடம் நல்ல பெயரை பெற்றுவிட்டது. பாண்டியன், கண்டிப்புடனும் கஞ்சத்தனமாக இருந்து பிள்ளைகளை எப்படி வழி நடத்துகிறார் என்று காட்டும் விதமாக சீரியல் போய்க் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கதிர் மற்றும் ராஜியின் கெமிஸ்ட்ரி, இவங்களுடைய டாம் அண்ட் ஜெர்ரி சண்டை மற்றும் காதல் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்கள்.

எண்டரி கொடுக்கப் போகும் ஜீவா

இதனை தொடர்ந்து முதல் பாகத்தில் நடித்த மீனா இதிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் மீனாவை பார்ப்பதற்கு செட்டாகவில்லை, அதிலும் செந்திலுக்கு அக்கா போல் இருக்கிறார் என்று பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் தன்னுடைய நடிப்பால் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்க செய்து இப்பொழுது மீனா செந்திலை பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கிறது என்று பெயர் எடுத்து விட்டார்கள்.

இப்படி இவர்களை சுற்றி கதை போய்க் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் செந்தில் என்கிற வசந்த் வாசி இந்த நாடகத்திலிருந்து விலகப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமீபத்தில் தான் எலிமினேஷன் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சீரியலிலும் விலகப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதற்கு பதிலாக வேற யார் வருகிறார் என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் மீனாவுக்கு ஜோடியாக ஜீவா கேரக்டரில் நடித்த வெங்கட் ரங்கநாதன் நடிக்கப் போகிறார். இவர் விஜய் டிவியில் கிழக்கு வாசலிலே என்ற சீரியலில் நடித்து வந்தார். ஆனால் இந்த சீரியல் பெரிசாக ஓடாமல் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபட்டதால் அவசர அவசரமாக முடித்து விட்டார்கள்.

அதனால் தற்போது எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கும் வெங்கட்டுக்கு மறுபடியும் மீனா கூட சேர்ந்து நடிக்கும் சான்ஸ் கிடைக்கப் போகிறது. இது ஒரு விதத்தில் சந்தோஷமாக இருந்தாலும், தற்போது மீனா செந்தில் என்கிற ஜோடியில் கெமிஸ்ட்ரி வர ஆரம்பித்துவிட்டது. மக்களுக்கும் பிடித்து விட்ட நிலையில் நல்லா போயிட்டு இருந்த கதையில் திடீரென்று ஏற்படப் போகும் மாற்றம் எந்த அளவிற்கு மக்களை திருப்திப்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News