திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சீரியல் நடிகை என ஒதுக்கிய ஹீரோக்கள்.. தேடி வர வைத்து முகத்தில் கரியை பூசிய வாணி போஜன்

Actress Vani Bhojan: சன் டிவியின் தெய்வமகள் சீரியல் மூலம் சத்யாவாக ரசிகர்களை கவர்ந்த வாணி போஜன் இப்போது சினிமாவில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் பரத்துடன் இவர் இணைந்து நடித்திருக்கும் லவ் திரைப்படம் வரும் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இவரை சீரியல் நடிகை என சில ஹீரோக்கள் ஒதுக்கி வைத்த சம்பவத்தை அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நேரத்தில் அந்த வாய்ப்புகள் எல்லாம் கைநழுவி போனதாம்.

Also read: சினிமாவை தாண்டி ஓ.டி.டி-யும் கைவிட்ட 5 நடிகைகள்.. எல்லா பக்கமும் பேரடி வாங்கிய வாணி போஜன்

இதற்கு முக்கிய காரணம் இவர் சின்னத்திரை நடிகை என்பதுதான். அதனாலேயே பல முன்னணி ஹீரோக்கள் இவருடன் நடித்தால் தங்கள் கௌரவம் என்ன ஆகும் என்ற நினைப்பில் கடைசி நேரத்தில் அவரை வேண்டாம் என்று கழட்டி விட்டிருக்கிறார்கள்.

இதனால் நொந்து போன வாணி போஜன் பொறுமையாக காத்திருந்து தனக்கான வாய்ப்புகளை பெற்றிருக்கிறார். அப்படி நடிக்க ஆரம்பித்த அவர் விக்ரம் பிரபு, ஜெய், பரத் ஆகிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்தார். அதிலும் மகான் படத்தில் இவர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தது பலரையும் வியக்க வைத்தது.

Also read: அப்படி மட்டமா என்னால நடிக்க முடியாது.. ஜிவி பிரகாஷ் படத்தை ரிஜெக்ட் செய்ய வாணி போஜன் கூறிய காரணம்

ஆனால் அவருடைய காட்சிகள் படத்தில் வரவில்லை என்றாலும் விக்ரமுடன் நடித்தது இவருக்கு பப்ளிசிட்டியை தான் கொடுத்தது. இப்படி சிறிது சிறிதாக முன்னேறிய இவருக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அப்போது இவரை உதாசீனப்படுத்திய சில ஹீரோக்களின் பட வாய்ப்புகளும் வந்ததாம்.

ஆனால் இவர் அந்த வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். இதன் மூலம் அவர் தன்னை அவமானப்படுத்தியவர்களை தேடி வர வைத்து அவர்கள் மூஞ்சியில் கரியை பூசி இருக்கிறார். இதை அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது கொஞ்சம் ஓவர் ஆட்டிட்யூட்டாக பார்க்கப்பட்டாலும் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

Also read: குடும்பத்தோடு பார்க்க முடியாத 6 வெப் சீரிஸ்.. எல்லையை மீறிய ஜெய்-வாணி போஜன் 18+ மோசமான காட்சிகள்

Trending News