சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

Jason Sanjay: ஜேசன் சஞ்சயை பார்த்து அலறி அடித்து ஓடும் ஹீரோக்கள்.. விஜய் மகனுக்கு இந்த நிலைமையா?

Vijay Son Jason Sanjay: என்னதான் திறமை இருந்தாலும் சினிமாவிற்குள் முகம் தெரிய வேண்டும் என்றால் அதற்கு பெயரும் புகழும் ரொம்பவே அவசியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வசூல் மன்னனாக ஆட்ட நாயகனாக ஜொலித்து வரும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அடி எடுத்து வைத்திருக்கிறார். இவர் இயக்குனர் ஆவது விஜய்க்கு பிடிக்கவில்லை என்றாலும் தன் மகன் விருப்பத்திற்கு எதிராக எதுவும் சொல்லவில்லை.

அதனால் பெரிய நிறுவனத்துடன் கூட்டணி வைக்கும் விதமாக லைக்காவுடன் இணைந்து முதல் படத்திற்கு அஸ்திவாரம் போட்டார். ஆனால் போட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிய நிலையில் இன்னும் வரை அந்த படத்திற்கான எந்தவித பேச்சு மூச்சும் வெளிவரவில்லை. இடைப்பட்ட நேரத்தில் இதற்கான ஹீரோவை தேடும் வேலையில் இருக்கிறோம் என்ற தகவல் வெளியானது.

நிலைகுலைந்து பேன் நிற்கும் விஜய் மகன்

அந்த வகையில் விஜய் சேதுபதி, துருவ் விக்ரம் இவர்கள் பெயர் அடிபட்ட நிலையில் இவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் அடுத்து கவினை சந்தித்து பேசியதாக தகவல் வெளிவந்தது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கவினும் அவர் கடைசியாக கொடுத்த பேட்டியில் இப்படி ஒரு வாய்ப்பு வந்ததாக கூறியிருந்தார்.

ஆனால் தற்போது கவினும் கதை கேட்டதோடு சரி எந்தவித பதிலும் சொல்லாமல் டாட்டா காட்டிவிட்டார். அதற்கு காரணம் ஜேசன் சஞ்சயிடம் கதை கேட்ட ஹீரோகளுக்கு பெருசாக கதையின் மீது ஈடுபாடு இல்லாததால் அப்படியே பாதியில் போய்விட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் ஜேசன் சஞ்சய்க்கு அவர் மீது இருக்கும் அதீத நம்பிக்கையால் இந்த படத்திற்கு முன்னணி ஹீரோக்களை வைத்து தான் எடுக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருக்கிறார்.

ஏனென்றால் அவர்களை வைத்து இயக்கினால் தான் முதல் படத்திலேயே பிசினஸில் அதிக லாபத்தை கொடுக்கும் என்பதினால். ஆனால் முன்னணி நடிகர்களோ அனுபவம் இல்லாத ஜேசன் சஞ்சயை நம்பி எப்படி நடிப்பது என்று தயக்கம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யின் மகன் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் அவர் கதை சொல்லு வரும் பொழுது உட்கார்ந்து கதையை கேட்கிறார்கள்.

பிறகு ரொம்பவே பிஸியாக இருப்பது போல் காட்டி கால்ஷீட் கொடுக்காமல் அலறி அடித்து ஓடிவிடுகிறார்கள். இதனால் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிப்பதற்கு எந்த ஹீரோவும் கிடைக்காமல் கடந்த ஒரு வருடமாக படத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகிறார். இது என்னடா விஜய் மகனுக்கு வந்த சோதனையாய் என்பதற்கேற்ப தற்போது இயக்குனராக தட்டு தடுமாறி வருகிறார்.

இதற்கு பேசாமல் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் விஜய் ஆசைப்பட்ட மாதிரி ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த பின்பு இயக்குனர் பாதைக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கலாம் என்ற பேச்சுக்களும் நிலவி வருகிறது. ஏனென்றால் விஜய்க்கு தன்னை மாதிரி தன் மகனும் பெரிய ஹீரோவாக வேண்டும் என்பதுதான் ஆசை.. அதற்காக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் இடம் கதை கேட்டு வைத்திருந்தார்.

ஆனால் விஜய் மகனுக்கு அதில் ஈடுபாடு இல்லாததால் நடிப்பதற்கு நோ சொல்லிவிட்டார். தற்போது ஹீரோவும் ஆகாமல் இயக்குனராகவும் அடியெடுத்து வைக்காமல் தட்டு தடுமாறி வருகிறார்.

Trending News