புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஒரே படத்தில் நடிகைகளை மயக்கிய ஹீரோக்கள்.. திருமணம் செய்த 5 நட்சத்திர ஜோடிகள்

சினிமாவில் இடம் பெறும் ஹீரோ,ஹீரோயின்கள் ஜோடி பொருத்தத்தை பெரிதளவு விரும்பும் ரசிகர்கள், நிஜத்தில் இவர்கள் ஜோடி சேர்ந்தால் நல்லா இருக்கும் எனவும் நினைப்பதுண்டு. அவ்வாறு நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர்கள் நடிக்கும் இடத்தில் ஏற்படும் காதலால் நிஜத்தில் நட்சத்திர ஜோடிகளாகவே மாறி விடுகின்றனர்.

அவ்வாறு ஒரு சில படங்களில் இடம் பெற்ற ஹீரோயின்களை மயக்கி தன் காதலில் விழவைத்த ஹீரோக்களும் தமிழ் சினிமாவில் உண்டு. அவ்வாறு ஒரு சில படத்தில் நடித்து, காதலித்து திருமணம் செய்து கொண்ட 5 நட்சத்திர ஜோடிகளை பற்றி இங்கு காணலாம்.

Also Read: விஜய், அஜித் சினிமாவை விட்டுப் போகணும்னு ஆசைப்படும் 5 நடிகர்கள்.. ஒரே ஒரு வாய்ப்புக்காக ஏங்கும் தங்கலான்

அஜித்-ஷாலினி: இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் தான் அமர்க்களம். படப்பிடிப்பில் ஏற்பட்ட பழக்கத்தால் காதல் வயப்பட்டு இவர்கள் அதன்பின் திருமணம் செய்து கொண்டு தற்போது நட்சத்திர ஜோடிகளாக இருந்து வருகின்றனர். இவர்களின் 23 வருடம் காதலை உணர்த்தும் விதமாக இன்று வரை இணை பிரியாத ஜோடியாக தன் பிள்ளைகளின் மேன்மையில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆர்யா-சாயிஷா: 2021ல் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் தான் டெடி. இப்படத்தில் இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தமும் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதை தொடர்ந்து கஜினிகாந்த் படத்தில் சேர்ந்து நடித்த பிறகுதான் சாயிஷா ஆர்யா இருவரும் காதலித்தனர். அதன் பின் இவர்கள் திருமணம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்கள் இருவரின் அன்பிற்கு அடையாளமாக ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அஜித்தின் அழகில் மயங்கி காதலித்த 5 நடிகைகள்.. திருமணத்திற்கு பிறகும் கூட விடாமல் துரத்திய ஹீரோயின்

ஆதி- நிக்கி கல்ராணி: 2017ல் வெளிவந்த நகைச்சுவை த்ரில்லர் திரைப்படமான மரகத நாணயம் என்னும் படத்தில் நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இணைந்து நடித்திருப்பார்கள். இப்படத்தின் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி, அதன் பின் பல வருடங்கள் காதலித்த பிறகு கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். படத்தில் ஜோடியாக இருந்த இவர்கள் தற்போது நிஜத்தில் நட்சத்திர ஜோடியாக திரை வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றனர்

கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன்: தமிழ் சினிமாவில் நடிகர்களாய் வலம் வந்த இவர்கள் தற்போது நட்சத்திர ஜோடியாக மாறி இருக்கின்றனர். இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி அதன் பின் காதல் மலர்ந்து பெற்றோர்களின் விருப்பத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் இத்தகைய முடிவு பிரபலங்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

Also Read: ஷாலினிக்காக அஜித் கொடுத்த வரதட்சணை.. இப்படியும் ஒரு காதலா என வியக்க வைத்த சம்பவம்

பகத் பாசில்-நஸ்ரியா: இவர்கள் இருவரும் மலையாள மொழி படங்களில் முக்கிய பிரபலங்கள் ஆவார்கள். இவர்கள் இருவர் இடையே காதல் மலர்ந்ததால் அதை ஒட்டி வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும் நஸ்ரியா தன் கணவனுடன் நேரத்தை செலவிடுவதற்காக படங்களை குறைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News