தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆனால் ஒரு சில நடிகர் நடிகைகள் மட்டுமே ரசிகர்களால் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதாவது ஒரு நடிகருக்கு படத்தில் ஜோடியாக நடித்துவிட்டு பின்பு அதே நடிகருக்கு அம்மாவாக ஒரு சில நடிகைகள் நடித்துள்ளனர். எந்தெந்த நடிகைகள் எந்த நடிகருக்கு எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதை பார்ப்போம்.
சுஜாதா: ரஜினிகாந்த் மற்றும் சுஜாதா அவர்கள் படத்தில் கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள் பின்பு கொடிபறக்குது, உழைப்பாளி மற்றும் பாபா ஆகிய படங்களில் சுஜாதா ரஜினிகாந்திற்கு அம்மாவாக நடித்திருப்பார்.
ஸ்ரீவித்யா: அபூர்வராகங்கள் படத்தில் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீவித்யா நடித்து இருப்பார். ஆனால் அதே கமலுக்கு அபூர்வ சகோதரர்கள் படத்தில் அம்மாவாக நடித்து இருப்பார்.
கௌசல்யா: விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரியமுடன் இப்படத்தில் விஜய் மற்றும் கவுசல்யா காதலர்களாக நடித்திருப்பார்கள். பின்பு விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தில் விஜய்யை பார்த்து என்னுடைய அண்ணன் என கூறுவார்.
ராதிகா: ராணி மகாராணி படத்தில் ரகுவரனுக்கு மனைவியாக ராதிகா நடித்திருப்பார். பின்பு உயிரிலே கலந்தது படத்தில் ரகுவரன்விற்கு அம்மாவாக நடித்திருப்பார்.
ஜெயபாரதி: அலாவுதீன் அற்புத விளக்கு படத்தில் ஜெயபாரதி கமலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் அதே கமலுக்கு மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மீனா: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த். இப்படத்தில் மீனா புஷ்டியான பாப்பாவாக நடித்திருப்பார். பின்பு ஒரு சில வருடங்களுக்குப் பிறகு முத்து படத்தில் ரஜினிகாந்திற்கு மனைவியாக நடித்திருப்பார். இதைப் பார்க்கும்போது தன் படத்தில் குழந்தையாக நடித்த மீனாவிடமே ஜோடியாக ரஜினிகாந்த் நடித்துள்ளார்.