Serial: மக்களிடம் பிரபலமாக வேண்டும் என்றால் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் அதற்கு முதல் படிக்கட்டாக இருக்கிறது. அந்த வகையில் சீரியலில் நடித்து விட்டால் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துவிடும். இதன் மூலம் சிலருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதனாலயே நடிக்கும் திறமையுள்ள பலரும் முதலில் தேர்ந்தெடுப்பது சீரியலில் நடிக்கும் வாய்ப்பை தான்.
அப்படித்தான் ஒரு ஹீரோயினும் சீரியல் மூலம் அவருடைய என்டரியை கொடுத்தார். அதன் மூலம் மக்களிடம் பிரபலமானதும் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று சீரியலில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது புதுசாக கமிட்டாகி இருந்த ஒரு சீரியலில் கதை எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று சொல்லி விலகிக் கொள்கிறார்.
அந்த சீரியல் நடிகை வேறு யாருமில்லை சன் டிவியில் பூவே உனக்காக என்ற சீரியல் மூலம் அறிமுகமான ஜோவிதா. இந்த நாடகத்திற்கு பிறகு அருவி என்ற சீரியலில் முக்கியமான கதாநாயகியாக நடித்தார். இதனை வெற்றிகரமாக முடித்த நிலையில் ஜீ தமிழில் மௌனம் பேசியதே என்ற சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்த சீரியல் ஜீ தமிழில் ஆரம்பித்து கிட்டத்தட்ட 69 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் இதிலிருந்து விலகிக் கொள்வதாக துளசி என்கிற ஜோவிதா சோசியல் மீடியாவில் அவருடைய கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அதாவது சிவாவின் மனைவியாக துளசி தற்போது நடித்து வருகிறார். ஆனால் இவர் சேதுவின் கையால் தாலி கட்டிக் கொண்டவர்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் சிவாவின் மனைவியாக துளசி நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியல் மக்களிடத்தில் கொஞ்சம் ரீச் ஆகி வரும் இந்த தருணத்தில் என்னுடைய கதாபாத்திரம் சுயநலம் பிடித்ததாக இருக்கிறது. முக்கியமான ஹீரோயின் ஆக நடிக்கும் எனக்கு என்னுடைய கதை பிடிக்கவில்லை. நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி கதைகளும் இல்லை.
அதனால் இதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று ஓபனாக சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் கூடிய சீக்கிரத்தில் நல்ல கதையுடன் அடுத்த ஒரு சீரியலில் உங்களை சந்திக்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். ஆனால் இதுவரை எந்த ஒரு சீரியல் கதாநாயகியும் உண்மையான காரணத்தை சொல்லாமல் தான் விலகி இருக்கிறார்கள்.
அந்த வகையில் முதல்முறையாக துளசி என்கிற ஜோவிதா, மௌனம் பேசியதே சீரியல் கதை எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று வெளிப்படையாக சொல்லி விலகி இருக்கிறார்.