செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சன் டிவி நம்பர் 1 சீரியலில் இருந்து விலகப் போகும் கதாநாயகி.. என்டரி கொடுக்கும் கண்மணி சீரியலின் நடிகை

Heroine to withdraw from Sun TV No. 1 serial: பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் தனி மவுசு உண்டு. அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாடகத்தை தவிர வேறு நாங்கள் எதையும் பார்க்க மாட்டோம் என்று பல குடும்பங்கள் சன் டிவி நாடகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதனாலேயே எப்போதுமே டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி முதல் இடத்தை பிடித்து விடும்.

அத்துடன் மற்ற சேனல்களை விட சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகத்தின் எண்ணிக்கை தான் அதிகம். அந்த வகையில் பகலில் எட்டு நாடகம், மாலையில் எட்டு நாடகம் என்று பிரிக்கப்பட்டு குடும்பங்களை கவர்ந்து வருகிறது. அதில் பகலில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து மக்கள் மனதை கவர்ந்த சீரியல் இலக்கியா.

இதில் சித்தி 2 நாடகத்தில் நடித்து பிரபலமான ஹீரோ நந்தன் லோகநாதன் மற்றும் இவருக்கு ஜோடியாக ஹேமா பிந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களின் ரொமான்ஸ் மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை இப்படி தான் இருக்க வேண்டும் என்று பொறாமைப்படும் அளவிற்கு இவர்களுடைய பெர்பார்மன்ஸ் ரியலாகவே காட்டப்பட்டிருக்கும்.

Also read: ஜான்சியை விட 100 மடங்கு வில்லியாக வரும் ஜனனியின் புது உறவு.. குணசேகரனிடம் சொத்தை அபகரிக்கும் பிளான்

இதை பார்ப்பதற்காகவே ஒட்டுமொத்த குடும்பமும் பகலில் இலக்கியா நாடகத்தை மிஸ் பண்ணியதே கிடையாது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி இதில் இலக்கியவாக நடிக்கும் ஹேமா பிந்து இந்த சீரியலை விட்டு விலகுகிறார். காரணம் என்னவென்றால் என்னதான் இந்த நாடகம் மக்களிடம் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி இருந்தாலும், தற்போது இதைவிட ஸ்ட்ராங்கான கதாபாத்திரமாக படத்தில் நடிக்கும் சான்ஸ் கிடைத்திருக்கிறது.

அதனால் இப்போதைக்கு சீரியலில் நடிப்பதாக இல்லை என்று இலக்கியா கதாபாத்திரத்தை விட்டு இன்னும் ஓரிரு வாரங்களில் போகப் போகிறார். அத்துடன் இவருக்கு பதிலாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்மணி சீரியலில் நடித்த சாம்பவி குருமூர்த்தி கமிட்டாகி நடிக்கப் போகிறார். இவர் தற்போது தெலுங்கு சீரியலில் கயல் நாடகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் கூடிய விரைவில் இலக்கியா கதாபாத்திரத்தில் இவர் வந்து விடுவார். ஏற்கனவே சின்னத்திரையில் மற்றும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததால் இலக்கியா மூலமாகவும் மக்களை எளிதாக கவர்ந்து விட வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் இலக்கியா நாடகத்தில் நடித்த ஹேமா பிந்து நடிப்பை மறக்கடிக்கும் வகையில் இவருடைய நடிப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தற்போது இலக்கியா சீரியலில் நடிக்கும் ஹேமா பிந்து

hema bindhu
hema bindhu

ஹேமா பிந்துக்கு பதிலாக என்ட்ரி கொடுக்கப் போகும் சாம்பவி குருமூர்த்தி

shampavi gurumoorthy
shampavi gurumoorthy

Also read: தெருத்தெருவாக போய் ஓட்டு கேட்கும் எதிர்நீச்சல் டீம்.. நாடாளுமன்றத் தேர்தலை மிஞ்சும் பரிதாபம்

Trending News