நடிகை தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும் தமிழ் சினிமா அவருக்கு கை கொடுக்கவில்லை. அக்கடதேசத்தில் நடிகைக்கு பேரும் புகழும் கிடைத்ததால் தொடர்ந்து அங்கே நடித்துக் கொண்டிருந்தார். சிறு வயதிலேயே புகழின் உச்சத்தில் இருக்கும்போது தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சந்தோஷமாக சென்ற இவர்களது வாழ்க்கையில் புயல் காற்று வீச தொடங்கியது. அதாவது நடிகையின் தோழி சினிமாவில் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும் போது நடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு தங்க இடம் இல்லை என்பதால் பரிதாபப்பட்டு தனது வீட்டிலேயே நடிகையை தங்க வைத்திருக்கிறார்.
Also Read : வாரிசு நடிகையை வேட்டையாடிய 68 வயது நடிகர்.. நேரில் சென்று வெளுத்து வாங்கிய மனைவி
பாவம் என்று இடம் கொடுத்ததற்கு நடிகை பட்டா போட்டுவிட்டார். அதாவது நடிகையின் கணவனுக்கு தலையணை மந்திரம் போட்டு வசியம் செய்து விட்டார். இந்த விஷயம் நாளடைவில் மனைவிக்கு தெரிய வர பிரச்சனை பூதாகரமாக வெடித்து விட்டது. மேலும் கணவனை பிரிந்து விடலாம் என்று நடிகை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார்.
இதுதான் நல்ல நேரம் என்று கணவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால் இதில் நடிகைக்கு என்ன ஒரு சங்கடம் ஏற்பட்டது என்றால் அவருடைய குழந்தைகளும் தாயுடன் வர மறுத்து விட்டனர். தந்தை நல்லவர் என்று நினைத்துக் கொண்டு அவருடன் தான் இருப்போம் என்று கோர்ட்டில் சொல்லிவிட்டனர்.
ஆகையால் நடிகை மனம் நொந்து போய் விட்டார். வீட்டில் விட்டதற்கு கணவன், பிள்ளைகள் என அனைவரையும் நடிகை அபகரித்துக் கொண்டார். இதனால் வெறுமையில் சுற்றி திரிந்த நடிகை இப்போது தனது கவனத்தை படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். எனவே நடிகை படு பிசியாக தன்னை வைத்துக் கொண்டிருக்கிறார்.
Also Read : கிடைச்ச கேப்பில் ஜல்சா பண்ணிய பிரபல நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த கள்ளக்காதல்