வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிரம்மாண்டத்தின் உச்சம் தொட்ட லோகேஷ்.. விஜய்க்கு நிகராக ஆட்டம் போட்ட ஹீரோயின்

Actor Vijay: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இப்படம் குறித்த தகவல்கள் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு லியோ சோசியல் மீடியாவை தன்னுடைய ஆளுமையில் வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு நாளும் படம் குறித்த புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி பலருக்கும் சர்ப்ரைஸ் ஆக இருக்கிறது. அதாவது பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் லியோ படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சி இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் லோகேஷ் கவனமாக இருந்தார்.

Also read: அரசியலில் பதம் பார்க்க லியோவை பகடைக்காயாக யூஸ் பண்ணும் விஜய்.. வாயடைத்து போய் நிற்கும் லோகேஷ்

அந்த வகையில் 2000 டான்சர்களுடன் விஜய் ஆடும் அந்தப் பாடல் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது படமாக்கப்பட்டு வந்தது. தற்போது அந்தப் பாடல் முழுமையாக எடுக்கப்பட்ட நிலையில் அதில் என்ன மாதிரியான சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என்ற தகவல்களும் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அதாவது காட்சியோடு ஒன்றிய படி அப்பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

எப்படி என்றால் சஞ்சய் தத் தன்னுடைய பாதுகாவலர்களோடு வரும்படியாக இருக்கும் அந்த குறிப்பிட்ட காட்சியில் தான் இந்த பாடல் இடம் பெறுகிறது. அதிலும் விஜய்யுடன் இணைந்து மடோனா செபாஸ்டின் அவருக்கு நிகராக செமையான ஆட்டம் போட்டிருக்கிறாராம். ஏற்கனவே இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட நடிகைகள் இருக்கின்றனர்.

Also read: அப்பாவோட அவஸ்தை எனக்கும் தெரியும்.. லோகேஷிடம் தளபதி விஜய் கூறிய சீக்ரெட்

அதில் மடோனாவும் இப்படத்தில் இருப்பது வியப்பாக இருந்தாலும் விஜய் உடன் இணைந்து அவர் ஆடி இருக்கிறார் என்பது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமின்றி அந்த பாடலில் மன்சூர் அலிகான், அர்ஜுன் ஆகியோரின் சிறப்பு ஆட்டமும் இருக்கிறதாம். இதுதான் தற்போதைய பரபரப்புக்கு காரணமாக இருக்கிறது.

இதை வைத்து பார்க்கும் போது இந்த பாடல் நிச்சயம் படத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட்டுக்கு காரணமாக இருக்கும் என்பதும் தெரிகிறது. அந்த வகையில் பிரம்மாண்டத்தின் உச்சகட்டமாக இந்த பாடலை படமாக்கி இருக்கும் லோகேஷ் ரசிகர்கள் எதிர்பார்க்காத இன்னும் பல அதிர்ச்சிகளையும் கொடுக்க இருக்கிறார். அந்த வகையில் விரைவில் வர இருக்கும் விஜய்யின் பிறந்தநாள் அன்று லியோ படத்தின் சார்பாக ஒரு முக்கிய அப்டேட் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: தளபதி வீட்டுக்கு அருகே வீடு வாங்கிய 3 பிரபலங்கள்.. காரணம் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

Trending News