வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சென்சார் போர்டுக்கு தீனிபோடும் சினாமிகா.. முதல் படத்திலேயே இவ்வளவு பிரச்சனைகளா

மலையாள திரையுலகில் தற்போது ஒரு மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் துல்கர் சல்மான். தனது தந்தை மம்முட்டி போலவே இவரும் வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து வருகிறார். துல்கர் மலையாள நடிகராக இருந்தாலும் அவ்வபோது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் தமிழில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து துல்கர் படங்களுக்கு தமிழில் அதிக வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகியுள்ள ஹே சினாமிகா படத்தில் துல்கர் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நாயகிகளாக நடித்துள்ளனர். தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஹே சினாமிகா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியானது. அதன்படி படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஹே சினாமிகா படம் ஒரு அடல்ட் லவ் ஸ்டோரி படமாக உருவாகி உள்ளதாம்.

இந்த படம் ஒரு ஆடல்ட் படமாக என்று பேசப்படுகிறது. ஆடல்ட்  படம் என்றால் அது கட்டாயம் சென்சார் தணிக்கைக் குழுவினால் பரிசீலனை செய்யப்பட்டு, அதன்பின்தான் வெளியிடப்படும்.

தமிழ் சினிமாவில் சென்சார் என்பது மிக முக்கியமான ஒன்று. படத்தில் இந்த காட்சிகள் தான் இருக்க வேண்டும். இந்த காட்சிகள் இருக்க கூடாது என தணிக்கைக்குழு தான் முடிவு செய்வார்கள். இந்நிலையில் அடல்ட் படம் என்பதால் ஹே சினாமிகா படம் சென்சாருக்கு செல்லும் போது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சென்சாரில் ஓகே செய்த பின்னரே படம் வெளியாகும். எனவே என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Trending News