புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பிரபல சின்னத்திரை ஜோடி விவாகரத்து?.. சமூக வலைத்தளங்களில் திருமண புகைப்படங்களை டெலிட் செய்த ஜோடி!

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர்கள் ஒன்றாக பணிபுரியும் போது காதலிப்பது, திருமணம் செய்வது என்பது இயல்பான ஒன்று. இதுபோன்று திருமணம் செய்து கொள்பவர்களை நட்சத்திர ஜோடிகளாக சினிமா ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருவார்கள். வெள்ளித்திரை போலவே சின்னத்திரையிலும் ஒரு தொடரில் இணைந்து பணிபுரியும் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட நிறைய ஜோடிகள் இருக்கிறார்கள்.

சேத்தன்- பிரியதர்ஷினி, செந்தில்- ஸ்ரீஜா, சித்து- ஸ்ரேயா, ராகவ்- பிரீத்தா, ராஜ்கமல்- லதா ராவ், சஞ்சீவ்- ப்ரீத்தி போன்றவர்கள் எல்லாம் சின்னத்திரையில் ஒன்றாக நடித்து காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான். அந்த வரிசையில் பிரபல விஜய் டிவி சீரியல் ஜோடி கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களை பற்றிய செய்தி ஒன்றுதான் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

Also Read:திரும்பவும் புருஷனை கூட்டி கொடுக்க போகும் பாக்கியா.. இதெல்லாம் ஒரு பொழப்பா

இந்த ஜோடி காதலிப்பதாக தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த போது சின்னத்திரை சீரியல் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் இவர்கள் திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காதலித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்திருக்கிறார்கள்.

நிறைமாத நிலவே என்னும் வெப் தொடரின் மூலம் ரசிகர்களிடையே மிக பிரபலம் அடைந்தவர் தான் நடிகை சம்யுக்தா. இவர் விஜய் டிவியின் பாவம் கணேசன் என்னும் தொடரில் ஹீரோ நவீனுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன் பின்னர் அதே சேனலில் ஒளிபரப்பப்பட்ட சிப்பிக்குள் முத்து என்னும் தொடரில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதே தொடரில் ஹீரோவாக நடித்தவர் தான் விஷ்ணுகாந்த்.

                                                            சம்யுக்தா-விஷ்ணுகாந்த் ஜோடி

Samyuktha, Vishnukanth

Also Read:குணசேகரனிடம் வேஷம் போட்டு கவுக்கும் மருமகள்கள்.. குடும்பத்துடன் போடும் சதி வேலைகள்

இந்த சிப்பிக்குள் முத்து தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி காரணமாக திடீரென முடிக்கப்பட்டது. சீரியல் முடிந்த சில நாட்களிலேயே சம்யுக்தா, விஷ்ணுகாந்தின் மீதான காதலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இது பல ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மூன்றாம் தேதி இவர்கள் இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவருமே தங்களுடைய திருமண புகைப்படம் மற்றும் காதலில் இருந்து போது எடுத்த புகைப்படங்களை நீக்கியதன் மூலம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்களோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது.

Also Read:ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Trending News