லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால் தற்போது இப்படத்தின் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கமலின் படங்கள் எதுவும் வெளியாகாததால் விக்ரம் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.
விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பான் இந்தியப் படமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் விக்ரம் படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 5000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக எங்கு பார்த்தாலும் படத்தின் பேனர்கள் தான் தெரிகிறது.
மேலும் கமல் விக்ரம் படத்தின் பிரமோஷனுக்காக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகிறார். இந்நிலையில் கேரளாவுக்கு சென்ற விக்ரம் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் மோகன்லாலுடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியிலும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் போட்டியாளருக்கு காண்பிக்கப்பட்டது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது. கமல் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் விக்ரம் படத்தின் டிக்கெட்டை வாங்குவதில் மும்முரம் காட்டி வருகிறார்கள். விக்ரம் படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு லாபம் தரும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்ரம் படம் ப்ரீ ரிலீஸுக்கு முன்பே பல மொழிகளில் சாட்டிலைட் உரிமம் மற்றும் ஓடிடி ஆகியவற்றால் 200 கோடிக்கு மேல் வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விக்ரம் படக்குழு தற்போது மகிழ்ச்சியில் உள்ளது.