சினிமாவைப்பொறுத்தவரை ஒரு நடிகரின் படங்கள் தொடர்ந்து வெற்றிபெற்றால் உச்சத்திற்கு செல்வதும், தொடர் தோல்வியடைந்தால் பாதாளத்திற்கு செல்வதும் வழக்கம்தான். அந்தவகையில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகர்களைப்பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
தனுஷ்: பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிவரும் இவர் தென்னிந்தியாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். மேலும் அவர் அடுத்து நடிக்கவுள்ள திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என pan இந்திய திரைப்படமாக திட்டமிடப் பட்டுள்ளது. இப்படத்திற்காக ரூ 50 கோடி சம்பளமாக பெறவுள்ளாராம்.
கமல்: ஒருகாலத்தில் சினிமாவில் மட்டுமே பிசியாக இருந்த கமல், கடந்த இரண்டு ஆண்டாக முழுநேர அரசியலில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக அவரது மார்க்கெட் சரியத்தொடங்கியதால் தற்போது ஒரு படத்திற்கு சம்பளமாக 55 கோடி பெறுகிறாராம்.
அஜித்: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கு கடைசியாக வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டுமே நல்ல வெற்றி பெற்றது. இருந்தாலும் கடந்த 2 ஆண்டுகளாக இவருக்கு படங்கள் ஏதும் வராததால் இவர் 70 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
ரஜினி: தமிழ் சினிமாவில் அதிகமாக சம்பளம் பெற்று வரும் நடிகராக இருந்து வந்த ரஜினி கடைசியாக நடித்த தர்பார், பேட்ட படம் சரியாக ஓடவில்லை. தற்போது இவர் அண்ணாத்த படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம்.
விஜய்: விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்திற்காக 85 கோடி வரை பேசப்பட்டுள்ளதாகவும், அடுத்ததாக தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள படத்திற்கு 120 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே ரஜினியை ஒருவர் முந்தியிருப்பது இதுவே முதல்முறை.