சினிமாவில் படங்கள் தோல்வியடைந்தாலும் அடுத்தடுத்து கோடிகளில் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் இருந்துதான் வருகின்றன. ஆனால் அன்றைய காலகட்டத்தில் ஒரு படம் ஓடாவிட்டால் அடுத்த படத்தில் தங்களது சம்பளத்தை அட்ஜஸ்ட்மெண்ட் செய்த நடிகை, நடிகர்கள் அதிக அளவில் பார்க்கலாம்.
அப்போதே பிரபல நடிகை 60 வயதில் ஒரு லட்ச ரூபாய் வரை சம்பளம் பெற்று சாதனை படைத்துள்ளார். அதாவது ஒரு லட்சம் என்றால் கிட்டத்தட்ட தற்போதைய மதிப்பில் ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி வரையாம். ஔவையார் என்ற படத்தில் நடிப்பதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் தான் அன்றைய காலகட்டத்தில் நடிகர்களை விட அதிகமான சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெயரும் உண்டாம். 1953 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க படமாகப் பார்க்கப்பட்டது ஔவையார். ஜெமினி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கே பி சுந்தராம்பாள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த படத்தில் கிட்டத்தட்ட 17 பாடல்கள் கே பி சுந்தராம்பாள் பாடியுள்ளார். பல மேடைகளில் மட்டும் பாடிக் கொண்டிருந்த சுந்தராம்பாள் படங்களில் நடித்து வெற்றியும் கண்டார்.
இவர் அதிக அளவில் சம்பளம் வாங்குவதை பார்த்து ரத்தக்கண்ணீர் படத்திற்காக எம் ஆர் ராதா ஒரு லட்சத்தி ஒரு ரூபாய் எனக்கு சம்பளமாக வேண்டும் என்று கேட்டுள்ளார். அதையும் தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ளனர்.
இது தான் தயாரிப்பாளர்கள் நடிகை,நடிகர்கள் மேல் வைத்த நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது உள்ள தயாரிப்பாளர்களை வேலையாட்கள் போல, தலையாட்டி பொம்மைகள் போல சினிமா நடிகர் நடிகைகள் மாற்றிவிட்டது சற்று வருத்தம் தான் என்கிறது கோலிவுட் வட்டராம்.