வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சமோசா தின்னது ஒரு குத்தமா டா.. இதுக்கு பாஜகவே பரவா இல்ல, CID விசாரணைக்கு உத்தரவு போட்ட காங்கிரஸ்

இமாச்சல பிரதேசத்தில் ஒரு சமோசாவால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு வைத்திருந்த சமோசாவை யார் பாதுகாவலருக்கு வழங்கியது என்பதில் துவங்கிய பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. ஊர் ரெண்டு பட்டாள் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதை போல பாஜக இதை பார்த்து நக்கல் செய்து வருகிறது.

கவனக்குறைவாக முதலமைச்சருக்கு வைத்திருந்த சமோசாவை அதிகாரிகள் சாப்பிட்டதால், இதை அரசுக்கு எதிரான செயல் என்று முத்திரை குத்தி தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஷிம்லாவில், உள்ள சிஐடி காவல் துறையின் இணையவழி, குற்ற பிரிவு நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சாப்பிடுவதற்காக 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து சமோசாவும் கேக்கும் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை முதல்வருக்கு பரிமாறப்படாமல், அவருடைய பாதுகாவலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் ஒரு பிரச்சனையா?

இந்த நிலையில், அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால், எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்ததால், அவருக்கென்று ஸ்பெஷல் ஆக இந்த சமோசா வரவழைக்க பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமோசாவை யார் பரிமாறியது என்று, தற்போது சிஐடி விசாரித்து வருகிறது. இதை தொடர்ந்து பாஜாக, நாட்டு மக்கள் மேம்பாட்டை விட சமோசா பிரச்சனையை தான் இவர்களுக்கு பெரிதாக போய்விட்டது என்று விமர்சிப்பதோடு, இந்த நிகழ்வை நக்கல் செய்தும் வருகின்றனர்.

Trending News