சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இந்தியளவில் திரும்பி பார்க்க வைத்த 5 தமிழ் படங்கள்.. போட்டிபோட்டு ரீமேக் செய்யும் மாஸ் ஹீரோக்கள்

பொதுவாக சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி அடைந்துவிட்டால் அந்த திரைப்படத்தை பல மொழிகளிலும் ரீமேக் செய்ய இயக்குனர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி ரீமேக் ஆகும் திரைப்படங்களில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் நடிப்பார்கள்.

அந்த வரிசையில் தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படங்களைப் பார்த்து பிடித்துபோய் பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் அந்த கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அப்படி நடிகர்களை கவர்ந்த தமிழ் திரைப்படங்களை பற்றி காண்போம்

விக்ரம் வேதா: இப்படம் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட கதை களத்தை கொண்டு உருவான திரைப்படம். இப்படம் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இப்படம் தற்போது ஹிந்தியில் ரித்திக் ரோஷன் மற்றும் சைப் அலிகான் நடிப்பில் உருவாகி வருகிறது. பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாக இது இருக்கிறது.

கைதி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன், கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தடம்: கிரைம், திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு கொலையை கண்டுபிடிக்க போராடும் போலீஸ் கேரக்டரில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். இப்படம் விமர்சனரீதியாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. தமிழில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தற்போது இந்தியில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் முதலில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் தற்போது அவருக்கு பதில் ஆதித்யா ராய் கபூர் நடித்து வருகிறார்.

அருவி: இது தமிழ் சினிமாவில் பிரபலங்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு படம். இந்த படத்தில் அறிமுக நாயகி அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அவர் பலரும் நடிக்க தயங்கும் ஒரு கேரக்டரில் அசால்ட்டாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பலராலும் பாராட்டப்பட்ட இந்தத் திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதிதி நடித்த அந்த கேரக்டரில் தற்போது ஹிந்தி நடிகை பாத்திமா சனா சாய்க் நடித்து வருகிறார்.

ராட்சசன்: த்ரில்லர் திரைப்படமாக உருவான இப்படத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் ஆகியோர் நடித்திருந்தனர். தொடர் கொலைகளை செய்யும் சைக்கோ பற்றிய இந்த கதை தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்த திரைப் படத்தின் இந்தி ரீமேக்கில் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருகிறார்.

Trending News