திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஹிந்தி ராட்சசனில் அமலாபாலாக நடிக்கப் போவது யார் தெரியுமா.? அட இது நம்ம சூர்யா, கமல் பட நடிகை ஆச்சே!

தமிழில் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், அமலாபால் கூட்டணியில் 2018ல் திரைக்கு வந்த படம் “ராட்சசன்”. சிறிய பட்ஜெட்டில் பெரிய கலெக்சனை எடுத்த படம் விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் வரும் “கிரிஸ்டோபர்”கதாப்பாத்திரம் இதுவரை தமிழில் இருந்த வில்லன்களை எல்லாம் உண்டு செமித்தது. யூடியூப் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

இப்போது இப்படம் இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ரஞ்சித் திவாரி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் விஷ்ணு விஷாலாகவும், ரகுல் பிரீத்சிங் அமலாபாலாகவும் நடிக்கின்றனர்.

அக்சய் குமார், ரஞ்சித் திவாரி கூட்டணி ஏற்கனவே ஒரு வெற்றிப்படத்தை தந்துள்ளனர் இது இவர்கள் இணையும் இரண்டாவது படம்.

கமலஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார் ராகுல் ப்ரீத்தி சிங். தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

rakul-preethi-singh
rakul-preethi-singh

ராட்சசன் படத்தில் அமலாபால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதே கதாபாத்திரத்தை ரகுள் பிரீதி சிங் சமாளிப்பார் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Trending News