திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிரபல இசையமைப்பாளர் ஓரம் கட்டிய ஹிப்ஹாப் ஆதி.. தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வாய்ப்பு

ஹிப் ஹாப் தமிழா ஆதி சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். ராப் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். அவரின் பொழுதுபோக்கு ,தான் எழுதிய பாடல்களை ராப் பாடலாக பாடி இசை அமைப்பதுதான்.

இளநிலை பொறியாளர் படிப்பை முடித்த பிறகு முழு முயற்சியில் இசையில் இறங்கிவிட்டார். இதன் பிறகு தற்செயலாக அனிருத்தை சந்தித்த ஆதி  வணக்கம் சென்னை திரைப்படத்தில் பாடல் பாடி முதலில் அறிமுகமானார்.

அதன் பிறகு பல பாடல்களை சினிமாவில் பாடினார். பின் மீசைய முறுக்கு திரைப்படம் மூலமாக கதாநாயகனாகவும், இயக்குனராகவும் தன் பயணத்தை தொடங்கினார்.

தற்போது நாகார்ஜுன் அமலாவின் மகனான அகில் நடிக்கும் ஏஜென்ட் திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் ஆதி. திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.

thaman
thaman

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக முதலில் ஒப்பந்தமானவர் தமன். தமன் தற்போது பல படங்களில் பிசியாக இருப்பதால் இந்தப் படத்தில் இருந்து விலகினார் என்று கூறப்படுகிறது. அதனால் தமன்க்கு பதிலாக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஏஜென்ட் திரைப்படம் ஆக்ஷன் நிறைந்த கதை களமாக உருவாக உள்ளது. இப்படத்தில் ஆதி இசையமைக்க இருக்கும் திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

Trending News