பன்முக திறமைகளைக் கொண்ட ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பதை தாண்டியும் படங்களை இயக்குவது, கதாநாயகனாக நடிப்பது என அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்த திரைப்படம் நட்பே துணை மற்றும் நான் சிரித்தால்
இவரது இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கு என்று ஒரு தனி அங்கீகாரத்தை கொடுத்தது. இப்படத்திற்கு பிறகு இவர் அடுத்ததாக எந்த படத்தை இயக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர் .
தற்போது ஹிப்ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்து இயக்கும் இரண்டாவது படத்தை பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது இப்படத்திற்கு சிவகுமாரின் சபதம் என டைட்டில் வைத்துள்ளதாகவும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரசிகர் ஒருவர் செல்பி எடுக்கும்போது மொபைல் போனை தட்டிவிட்டு சம்பவத்திற்கு கடுமையான எதிர்ப்பு வந்த நிலையில் சிவக்குமார் மற்றும் சிவகுமாரின் குடும்பத்தாரன சூர்யா மற்றும் கார்த்தி இந்த செயலுக்கு மனம் வருந்துவதாக கூறி அந்த ரசிகருக்கு சூர்யா புதிய மொபைல் போன் வாங்கி கொடுத்தார்.
அப்போது சமூகவலைதளத்தில் இனிமேல் சிவக்குமார் மொபைல் போனை உடைக்க மாட்டார் என ரசிகர்கள் கூறி வந்தனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் சிவகுமார் சபதம் எடுத்ததாகவும் தெரிவித்தனர்.
தற்போது இந்த சம்பவத்தை மையப்படுத்தி தான் சிவகுமாரின் சபதம் என படத்திற்கு பெயர் வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். வரும் மார்ச் மாதத்தில் இந்த படம் வெளிவரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.