சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சேப்பாக்கம் மைதானத்தில் வெடித்த வெடிகுண்டு.. வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர் ட்ரெய்லர்

Kadaisi Ulaga Por Trailer: ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக இருந்தாலும் கூட இப்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் பிடி சார் வெளிவந்திருந்தது. அதை அடுத்து இப்போது அவருடைய நடிப்பில் கடைசி உலகப் போர் தயாராக இருக்கிறது.

செப்டம்பர் 20 வெளியாக இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. ஹிப் ஹாப் ஆதி இயக்கி தயாரித்து நடித்துள்ள இப்படத்தில் நாசர், நட்டி நடராஜ், அனாகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

படத்தின் பெயரை பார்த்ததுமே நிச்சயம் ஆக்ஷன் சம்பவமாக இருக்கும் என தெரிகிறது. அதே போல் தான் ட்ரைலர் முழுக்க வெடிகுண்டு, போராட்டம் என பரபரப்பாக நகர்கிறது. அதில் நாசர் அரசியல் புள்ளியாக வருகிறார்.

ஹிப் ஹாப் ஆதியின் ஆக்ஷன் அவதாரம்

அவருடைய மகளாக அனாகா அவரின் கணவராக நட்டி நடராஜ் இருக்கிறார். ஆனால் இவர் தான் மெயின் வில்லனாக இருக்கிறார். செய்யாத தவறுக்காக மாட்டிக் கொள்ளும் ஹிப் ஹாப் ஆதி வெடிகுண்டு வைத்ததாக கைது செய்யப்படுகிறார்.

அவருக்கு வில்லனாக இருக்கும் நட்டி நாசரின் பதவியை கைப்பற்ற சில வேலைகளை செய்கிறார். அதே போல் இறுதி காட்சியில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வெடிகுண்டால் தகர்க்கப்படுவது போல் ட்ரெய்லர் முடிந்துள்ளது.

சமீபத்தில் கோட் படத்தில் சேப்பாக்கம் ஸ்டேடியம் சம்பந்தப்பட்ட காட்சிகள் பட்டையை கிளப்பியது. அதை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினர். ஆனால் சில நாட்களிலேயே அந்த மைதானம் வெடிகுண்டால் பாதிக்கப்படுவது போல் இப்படத்தில் காட்டி இருக்கின்றனர்.

ஹிப் ஹாப் ஆதியின் கடைசி உலகப் போர்

Trending News