மீசையமுறுக்கு நட்பே துணை போன்ற படங்களில் கதாநாயகனாக கலக்கியவர் நடிகர் ஆதி. ஹிப்ஹாப் பாடல்களின் வாயிலாக அறிமுகம் ஆனதால் ஹிப்ஹாப் ஆதி என அழைக்கப்படுகிறார்.
அவ்வப்போதய சமூக நிலைகளை சரியாக களையெடுக்கும் அளவிற்கான பாடல்களை வெளியிட்டு பட்டையை கிளப்புபவர் ஆதி. இவர் இசையமைத்து வெளியிட்ட “டக்கரு டக்கரு” பாடல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடிப்படை ஆணிவேர்.
இப்படியாக புரட்சிகரமான பல்வேறு விடயங்களை செய்து வரும் ஹிப்ஹாப் ஆதியின் யூடியுப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 20லட்சம் பேர் ரசிகர்களாக இருக்கும் இந்த பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த யூடியூப் பக்கம் யாரால் முடக்கப்பட்டது எந்த மர்ம நபர்கள் செய்தனர் என்பதனைப் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. என்ன காரணத்தினால் இந்த யூடியூபெகம் முடக்கப்பட்டது என்பது பற்றிய தகவலும் வெளியாகவில்லை.