புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஸ்பைடர் மேனாக மாறிய ஹிப் ஹாப் ஆதி.. ட்ரெண்டாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ராப் பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி இப்போது நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக ப்ரமோஷன் பெற்ற ஆதி அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் வளர்ந்து வரும் நடிகராக மாறினார். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் அன்பறிவு திரைப்படம் வெளியாகி இருந்தது.

அதை தொடர்ந்து இவர் தற்போது வீரன், பி டி சார் உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் அவர் நடித்து வரும் வீரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிரடியாக வெளியாகி இருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி ஜி தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்.

Also read: தடுமாற வைத்து வேடிக்கை பார்த்த அம்மையார்.. சூடு பிடிக்க களமிறங்கிய கமல்

ஏ ஆர் கே சரவணன் இயக்கும் இந்த திரைப்படத்தில் ஆதி எதிர்பாராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். ஏற்கனவே இது குறித்து அரசல் புரசலாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள போஸ்டரும் அதை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த போஸ்டரில் ஆதி ஸ்பைடர் மேன் லுக்கில் காணப்படுகிறார்.

ஸ்பைடர் மேனாக மாறிய ஹிப் ஹாப் ஆதி

hiphop-adhi-veeran-poster
hiphop-adhi-veeran-poster

அது மட்டுமல்லாமல் அந்த போஸ்டரின் ஒரு பாதியில் நெற்றியில் பட்டையுடன் ஆன்மீகவாதி போன்றும் மற்றொரு பாதையில் ஸ்பைடர் மேன் போன்றும் இருக்கிறார். இதன் மூலம் அவர் இந்த படத்தில் புதுவித மேஜிக் ஒன்றை செய்ய இருப்பது நன்றாக தெரிகிறது. மேலும் அந்த போஸ்டரின் பின்னணியில் மர்மதேசம் நாடகத்தில் வருவது போன்ற ஒரு குதிரையும் காணப்படுகிறது.

Also read: வெறிபிடித்த காட்டு நாய்களை வேட்டையாடும் ஆண்ட்ரியா.. நோ என்ட்ரி திரில்லர் படத்தின் மிரட்டும் ட்ரெய்லர்

அதனாலேயே தற்போது வெளியாகி இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. மேலும் இப்படம் குழந்தைகளையும் அதிக அளவில் கவரும் என்றும் தெரிகிறது. பொதுவாகவே குழந்தைகள் ஸ்பைடர் மேன் போன்ற சாகச திரைப்படங்களை விரும்பி பார்ப்பார்கள். அதன் காரணமாகவே இப்படம் வரும் சம்மருக்கு வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஆதியின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில திரைப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. தற்போது அது அனைத்தையும் சரி செய்யும் முடிவில் ஆதி மும்முரமாக வேலை பார்த்து வருகிறார். அதனாலேயே இப்படம் அவருக்கு ஒரு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறதாம். தற்போது வெளியாகி உள்ள வீரன் திரைப்படத்தின் போஸ்டர் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Also read: மயில்சாமியின் கடைசி ஆசை நிறைவேற்றப்படும்.. இறுதி அஞ்சலியில் ரஜினி கொடுத்த வாக்குறுதி

Trending News