திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய்யை கேலி செய்தாரா ஹிப்ஹாப் தமிழா ஆதி? வைரலாகும் வசனம்

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். இவரைப் பற்றி ஏதாவது ஒரு விஷயம் வெளியில் வந்தால் அதை தளபதி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். அதேபோல் விஜய்யை கிண்டல் செய்வது போல யாராவது பேசி விட்டால் அவ்வளவுதான் அவர்களது கதி.

இப்படி இருக்கையில் திடீரென ஹிப் ஹாப் தமிழா ஆதி விஜய்யின் தந்தை சந்திரசேகர் பெயரில் ஒரு கேரக்டருக்கு பெயர் வைத்து அவரை டம்மி செய்வது போல் பேசிய வசனம் ஒன்று இணையத்தில் வைரலாகி விஜய்க்கு எதிரான வசனம் என பதியப்பட்டு வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி தற்போது நடிகராகவும் உள்ளார். இவர் நடித்த மீசைய முறுக்கு, நட்பே துணை போன்ற படங்களுக்குப் பிறகு வேறு எந்த படமும் ஓடியதாக தெரியவில்லை.

இருந்தாலும் ஹிப்பாப் தமிழா ஆதிக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சிவகுமாரின் சபதம். இந்த படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது. அதில் உங்க அப்பா பெயர் என்ன என ஹிப்ஹாப் தமிழா வில்லன் மகனை பார்த்து கேட்க, அவர் சந்திரசேகர் என்று சொல்ல, நான் அடிபட்டு மிதிபட்டு உயர்ந்த உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன் எனவும், உன்ன மாதிரி அப்பா பெயரை வைத்துக்கொண்டு சுற்றவில்லை எனவும் கொஞ்சம் கெத்தாக பேசிய வசனம் அவருக்கே வெட்டுக்குத்து வரும் அளவுக்கு ஆகிவிட்டது.

இது தன்னுடைய உழைப்பைப் பற்றி சொல்ல வைத்தாரா அல்லது வேண்டுமென்றே விஜய்யின் உழைப்பை கிண்டல் செய்யும் வகையில் வைத்தாரா என்பது தான் தற்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. கண்டிப்பாக விஜய்யை பகைத்துக் கொள்ள மாட்டார் என்றே கூறுகின்றனர். எதார்த்தமாக இந்த வசனத்திற்கு இந்த அடி தேவையா.

Trending News