நவீனகால டி ராஜேந்தர் என அழைக்கப்படுபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. டி ராஜேந்தர் தான் ஒரு காலத்தில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் பாடல்கள் ஆர்ட் டைரக்ஷன் என ஒரு பகுதியையும் விடாமல் படத்தில் அனைத்தையும் செய்வார்.
அதைப்போல் தான் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை பாடல்கள் என அனைத்து இடங்களிலும் முத்திரை பதித்து வருகிறார். இதுவரை ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் வெளிவந்த மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தது.
அந்த வகையில் அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகுமார் பொண்டாட்டி என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் கூட சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மீசைய முறுக்கு படத்தை தவிர மற்ற இரண்டு படங்களும் சுமாரான வெற்றியைப் பெற்றது என்பதே உண்மை. எப்படியாவது ஒரு வெற்றி கொடுத்து தன்னுடைய சினிமா மார்க்கெட்டை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
அதனால் அடுத்ததாக மரகதநாணயம் என்ற சூப்பர் டூப்பர் வெற்றிப்படத்தை கொடுத்த சரவணன் என்பவர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஆதி ஒப்பந்தமாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் செய்திகள் வெளிவந்துள்ளன.
மரகத நாணயம் படத்திற்கு பிறகு அதே படத்தின் இரண்டாம் பாகம் இயக்கப்போவதாக செய்திகள் வெளியானதால் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் திடீரென இந்த படத்தை கைவிட்டு ஹிப்ஹாப் தமிழா படத்தை கையில் எடுத்தது ஏன் என சமூக வலைதளங்களில் இயக்குனரை பார்த்து கேள்விகளை பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். அதைப்போல் ஒரே மாதிரியான படங்கள் நடித்து சலிப்பை தந்து கொண்டிருக்கும் ஹிப்ஹாப் தமிழா இந்த முறையாவது வித்தியாசமாக நடிப்பாரா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
