திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிம்பு வீட்டு வாசலில் நிற்கும் பெரிய கியூ.. வேதாளத்தை பழையபடி முருங்கை மரத்தில் நல்ல ஏற வைக்கும் உலக நாயகன்

Actor Simbu: மாநாடு, வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை துவங்கி மாபெரும் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் சிம்பு, அடுத்து எப்படியாவது ஒரு மெகா ஹிட் படம் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். பத்து தல படத்திற்கு பின்னர் அவர் வெளிநாடு சென்று அடுத்த படத்திற்கு ஏற்ற உடல் வாகுவை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ராஜ் கமல் தயாரிப்பில் தேசிங்கு  பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் கமிட் ஆகி இருந்தது. ஆனால் அந்த படத்தை இப்பொழுது  சிம்புவை நடிக்க விடாமல் பல பிரச்சினைகளை கிளப்பி வருகின்றனர். ஐசரி கணேஷ் சிம்புவை நடிக்க விடாமல் மறைமுகமாக பல வேலைகளை செய்து வருகிறார் என கூறப்படுகிறது.

Also Read: மலேசியாவில் மையம் கொண்டுள்ள சிம்பு, சிவகார்த்திகேயன்.. இதுதான் காரணமாம்

கமலும் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரியவில்லை. ஆனால் இப்போது நிலைமையை வேறு, உலக நாயகன் கமலஹாசன் தன்னுடைய தயாரிப்பில் சிம்புவை நடிக்க வைக்க இருக்கிறார். ஆனால் சிம்பு இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிப்பில் கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார்.

படத்திற்கான முழு ஏற்பாடுகளும் செய்த பின் படப்பிடிப்பை அப்படியே நிறுத்திவிட்டு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார். ஆனால் மாநாட்டிற்கு பின்பு சிம்பு ஐசரி கணேசனை டீலில் விட்டு விட்டார். இதனால் ஐசரி கணேசன் தற்போது கமலிடம் தஞ்சம் அடைந்திருக்கும் சிம்புவை தன்னுடைய படத்தில், உங்களது படத்திற்கு பிறகு நடித்து தரும்படி சிம்புவிடம் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

Also Read: ஏழு மாதங்களாக ஏங்கி கிடக்கும் சிம்பு.. செகண்ட் இன்னிங்ஸ் கேரியருக்கு வரப் போகும் பெரிய ஆபத்து

ஏனென்றால் கமல் மீது ஐசரி கணேசன் மிகுந்த மரியாதை வைத்திருப்பதால், தற்போதைய சூழலில் சிம்புவை அவரால் ஒன்னும் செய்ய முடியவில்லை. வரிசையாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சிம்பு-வுக்கு தற்போது பட வாய்ப்புகள் வரிசை கட்டி காத்திருக்கிறது.

அது மட்டுமல்ல கமலின் சப்போட்டால் தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை சிம்புவை பழைய மாதிரி ஆக்கி விடுவார்களோ! வேதாளத்தை பழையபடி முருங்கை மரத்தில் ஏறிறுமோ என சிம்பு ரசிகர்கள் பயந்து இருக்கின்றனர்.

Also Read: அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்த அந்த கதை.. சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான சம்பவம்

Trending News