வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நெல்சனை அவமானப்படுத்த நினைத்த நபர்.. வாயடைக்கச் செய்த நண்பன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் நெல்சனுக்கு தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்காது என பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால் தற்போது சூப்பர் ஸ்டார் படத்தை நெல்சன் தான் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தற்போது பல்வேறு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் நெல்சன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இப்படம் சில காரணங்களால் பாதியிலேயே நின்று போனதால் அருண்ராஜா எனக்கு பாடல் எழுத வருகிறது, நடிப்பிலும் ஆர்வமாக இருக்கிறது எனவே நான் அதையும் செய்யலாமா எனக் நெல்சன் இடம் கேட்டுள்ளார். அதற்கு நெல்சன் உனக்கு எது வருகிறதோ அதை நன்றாக செய்.

ஆனால் சினிமாவில் தான் உன் பங்களிப்பு இருக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பிறகு அருண்ராஜா காமராஜ் தெறி, கபாலி போன்ற படங்களில் பாடல்கள் எழுதி உள்ளார். அதன்பிறகு கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது இவர் இயக்கத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த பேட்டியில் உங்கள் குருநாதர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது அதைப் பற்றி கூறுங்கள் என பேட்டியாளர் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அருண் ராஜா காமராஜ் உங்களுக்கு பீஸ்ட் படம் எப்படி இருந்தது என்று எதிர்கேள்வி கேட்டார்.

தளபதி படம் எப்படி சார் நல்லா இல்லாம இருக்கும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என அந்த பேட்டியாளர் பதிலளித்தார். அதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும், நம்மை சில பேருக்கு பிடிக்கும் சில பேருக்கு பிடிக்காது அதை வைத்து நாம் யாரையும் எடை போட முடியாது என தனது குரு நெல்சனுக்கு ஆதரவாக அருண்ராஜா காமராஜ் பேசியிருந்தார்.

Trending News