வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ரத்தமும் சதையுமாக ஜல்லிக்கட்டு வரலாறு.. வெற்றிமாறனின் பேட்டைக்காளி வெப் சீரிஸ் விமர்சனம்

வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கிய பேட்டைக்காளி வெப் சீரிஸின் முதல் எபிசோட் கடந்த வாரம் ஆஹா ஓடிடியில் வெளியாகி உள்ளது. ரத்தமும் சதையுமாக ஜல்லிக்கட்டு வரலாற்றை படமாக்கி உள்ள இந்த வெப் சீரிஸில் சந்தோஷ் நாரயணனின் இசை, வேல்ராஜின் ஒளிப்பதிவு என டெக்னிக்கலாகவும் மிரட்டுகிறது

இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. ஆகையால் இந்த படத்தை ஆர்வத்துடன் பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு, முதல் எபிசோட் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருந்ததாக பாசிட்டிவ் விமர்சனங்கள் பேட்டைக்காளி வெப் சீரிஸ்க்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

Also Read: பேட்டைக்காளி, வாடிவாசல் ஒரே கதை தானா.. வெற்றிமாறன் கூறிய ஷாக்கான பதில்

பேட்டைக்காளி, வழக்கமாக தமிழ் சினிமாவில் காட்டப்படும் ஹீரோயிசமான ஜல்லிக்கட்டு படம் போல் இல்லாமல், எதார்த்தமான வாழ்வியலோடு ஒத்திருக்கிறது. இதில் கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

முதலில் வீர விளையாட்டாக இருந்த ஜல்லிக்கட்டு அதன்பின் ஜாதியை அடக்குமுறை, வன்மம், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கிடைக்கும் கௌரவம், அதற்காக எதையும் செய்யும் துணியும் பிடிவாதமும் என பல கோணங்களில் விரிந்ததை முதல் எபிசோடில் காட்டியுள்ளனர்.

Also Read: திமில பிடிக்கும் போது, ஒரு வீரம் வரும் பாரு அது சாமி கொடுத்த வரம்.. வாடி வாசலுக்கு முன்பே சீறிவந்த வெற்றிமாறனின் பேட்டைக்காளி

முதல் எபிசோடில் படத்தின் நாயகி ஷீலாவின் கேரக்டர் அறிமுகமாகவில்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளை திரைப்படங்களின் வழியே வெறும் வீர விளையாட்டுக்காக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அதன் மறுபுறத்தை பேட்டைக்காளி வெப் சீரிஸ் காட்டியுள்ளது.

எனவே முதல் எபிசோடில் ஒரு விஷயங்கள் தெளிவுப்படுத்தாததால், அடுத்த வாரம் வெளிவரும் பேட்டைக்காளி வெப் சீரிஸின் இரண்டாவது எபிசோடை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: வெற்றிமாறனை சீண்டிய கஞ்சா கருப்பு.. இதெல்லாம் உனக்குத் தேவையா?

Trending News