புஷ்பா 2 படம் ரிலீசானதும் ஆச்சு, எல்லா ரெக்கார்டையும் உடைச்சிருச்சு. ஆனால் விஜயின் ரெக்கார்டை உடைக்கவில்லை. அல்லு அர்ஜூன் மாஸ் நடிப்பு, ராஷ்மிகா, சுகுமாரின் கதை, திரைக்கதை எல்லாமே சூப்பர் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
ரிலீஸான புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி மேல் வசூலீட்டியது. பான் இந்தியா படமாக ரிலீசாகி, அனைத்து மொழிகளில் வசூல் குவித்து வருகிறது.
இந்தியில் ரூ.67.5 கோடி வசூல் செய்தது. முதல் நாள் வசூலில் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு, கேரளாவில் இப்படம் குறைவான வசூல் பெற்றதாக கூறப்படுகிறது.
புஷ்பா 2 ஹிட்டை அல்லு அர்ஜூன் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், விஜய்யின் சாதனையை அடுக்கி ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
விஜய் ரெக்கார்ட இன்னும் யாரும் டச் பண்ணல
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் லியோ. இப்படம் முதல் நால் நாளில் உலகம் முழுவதும் ரூ.145 கோடி வசூலித்தது. தமிழ் நாட்டில் 38 கோடியும், கேரளாவில் 12 கோடியும் வசூலித்தது.
புஷ்பா 2 கேரளாவில் 5 கோடி வரையில் தான் வசூலித்தாக கூறப்படுகிறது. எனவே கேரளா மட்டுமல்ல எல்லா மொழிகளிலும் விஜய் படம் முதல் நாளில் 10 கோடிக்கு மேல் வசூலித்து என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.