வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிங்கமோ, திமிங்கலமோ வேட்டைக்காரன பார்த்து தான் மிருகங்கள் பயப்படனும்.. சைக்கோ வேட்டையில் சரத்குமாரின் ஹிட்லிஸ்ட் டீசர்

Hitlist Teaser: சரத்குமார் ஹீரோவாக நடித்ததை காட்டிலும் இப்போது தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவருடைய இந்த வித்தியாசமான பரிமாணம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் போர் தொழில் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற சரத்குமார் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார்.

இந்த வகையில் அவரது மிரட்டலான நடிப்பில் ஹிட்லிஸ்ட் என்ற டீசர் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் வில்லனாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரகனி, ரெடின் கிங்ஸ்லி போன்ற பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள்.

Also Read : வேறு வழி இல்லாமல் சரத்குமார் நடித்த படம்.. கடைசியில் பிளாப் ஆனது தான் மிச்சம்

சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ஹிட்லிஸ்ட் படத்தை தயாரித்து இருக்கிறார். மேலும் இப்படம் போர் தொழில் போல கிரைம் திரில்லர் ஜானரில் தான் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சைக்கோ கொலைகாரனை தேடும் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்.

சிங்கமோ, திமிங்கலமோ வேட்டைக்காரன பார்த்து தான் மிருகங்கள் பயப்படனும் என்ற சரத்குமாரின் வசனம் அல்டிமேட் ஆக இடம் பெற்றிருக்கிறது. காணாமல் போன ஒரு பெண்ணை தேடு விதமாகத்தான் இந்த டீசர் அமைந்து இருக்கிறது. இப்படத்திலும் ஹீரோவைக் காட்டிலும் சரத்குமார் தான் ஸ்கோர் செய்வார் என்பது தெரிகிறது.

Also Read : போர் தொழிலுக்கு பிறகு வேட்டையாடத் தொடங்கிய சரத்குமார்.. நடுங்க வைக்கும் பரம்பொருள் ட்ரெய்லர்

சமீபகாலமாக போலீஸ் கதாபாத்திரம் சரத்குமாருக்கு பக்காவாக பொருந்தும் நிலையில் அதே போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஹிட்லிஸ்ட் படம் சரத்குமாரின் ஹிட்லிஸ்டில் சேர்கிறதா என்பது இப்படம் வெளியானால் தெரிந்துவிடும். மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.

https://youtu.be/eFU_yPHtvgA

Also Read : 30 வருடத்திற்கு பிறகு வெளிவரும் இரண்டாம் பாகம்.. சரத்குமார் நிராகரித்து இன்று வரை ஏங்கும் சூப்பர் ஹிட் மூவி

Trending News