வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் அதன்பின் ஒரு, சில காரணங்களால் வாய்ப்பை இழந்துள்ளனர். அந்த வகையில் ஒரு போட்டியில் மாபெரும் சாதனையை நிகழ்த்தி விட்டு, அதன்பின் அவர் எங்கே என்று தேடும் வகையில் அணியை விட்டு ஓரங்கட்டப்பட்ட கிரிக்கெட் வீரர்கள்.
கருண் நாயர்: இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த இரண்டாவது வீரர். முதல் வீரர் வீரேந்திர சேவாக். இவர் விளையாட வந்த மூன்றாவது போட்டியிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முதல் சதத்தையே 300 ரன்களாக மாற்றினார். அதன்பின் தேர்வாளர்கள் ஏன் இவரை அணியில் சேர்க்கவில்லை என்பது இன்றுவரை புரியாமல் உள்ளது.
ஜெயந்த் யாதவ்: இந்திய அணியின் ஸ்பின் ஆல்ரவுண்டர். இங்கிலாந்து தொடரில் 9வது ஆளாக களமிறங்கி சதத்தை அடித்த முதல் இந்திய வீரர். அஸ்வின் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் இடத்தை தொடர்ந்து பிடித்து வருவதால் இவரால் அணியில் சோபிக்க முடியவில்லை.
ஆன்ட் கண்டோமே: இவர் மேற்கு இந்தியதீவுகள் அணியைச் சேர்ந்தவர். தான் விளையாடிய முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசினார். இவர் மிகவும் மெதுவாக ஆடியதால் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். அவர் காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல ஜாம்பவான்கள் இடம் பெற்றிருந்தனர்.
ஸ்டீவ் வோ கப்பி: ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இவர் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 12 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். ஆனால் ஆஸ்திரேலியா நாட்டில் ஷேன் வார்னே என்னும் நட்சத்திரம் முன்பு இவரால் சோபிக்கமுடியவில்லை.
பாப் மாசிவ்: ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இவர் 6 போட்டிகளில் 31 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே 16 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். அதன்பின் மீதமுள்ள 5 போட்டிகளில் வெறும் 15 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்ததால் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன் பின் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.