நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாந்த் மீண்டும் அந்தகன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதால் அந்தகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் இன்டர்நேஷனல் நாயகி நடிக்க உள்ளாராம்.
தொடர் தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் பிரசாந்த் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடிக்க உள்ளார்.
அந்தகன் படத்தை முதலில் மோகன்ராஜா இயக்க இருந்த நிலையில் தற்போது பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜேஜே பெடரிக் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார்.
இந்நிலையில் பிரசாந்துக்கு ஜோடியாக நயன்தாரா பேசப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக தற்போது இன்டர்நேஷனல் நாயகி எமி ஜாக்சன் அந்தகன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளாராம்.
எமி ஜாக்சன் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.O திரைப்படம் தான். அதன் பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டிய எமி ஜாக்சன் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
அந்த வகையில் அந்தகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் எமி ஜாக்சன். அந்தகன் படம் எமி ஜாக்சனுக்கு மட்டுமில்லாமல் பிரசாந்துக்கும் முக்கியமான படம் என்பதால் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறதாம் படக்குழு.