வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

விக்ரமின் தங்கலான் படத்தில் இணையும் ஹாலிவுட் பிரபலம்.. இணையத்தை பற்ற வைத்த நெருப்பாக போஸ்டர்

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் இணைந்து இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் மூலமாக பா. ரஞ்சித்துடன் இயக்குனர் ஜிவி பிரகாஷ் முதல் முதலாக இணைகிறார். மேலும் ஸ்டுடியோ ஸ்கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டமாக சென்னையில் துவங்கி, பின்னர் கர்நாடகாவில் நடந்தது.

Also Read: கேள்விக்குறியான விக்ரமின் எதிர்காலம்.. தங்கலான் படத்திற்காக நீச்சல் குளத்திலேயே தவம் கிடக்கும் புகைப்படங்கள்

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேஜிஎப் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. அங்கு படப்பிடிப்பை 40 நாட்கள் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தங்கலான் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிப்பதாக படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

இவர் தி பியானிஸ்ட்(The Pianist) என்ற படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தி பீச்(The Beach), லாரா கிராப்ட் டாம் ரைடர்( Lara Croft Tomb Raider: The Cradle of Life)  போன்ற அட்வெஞ்சர் ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கும் டேனியல் கால்டகிரோனே என்பவர் தான் இந்த படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிக்க களம் இறங்கியுள்ளார்.

Also Read: வீட்டிற்கு வெளிப்படையாய் செல்ல முடியாத விக்ரம் .. பா ரஞ்சித்தால் படாதப்பாடு

இந்த படத்தில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரங்களை அடிப்படையாக வைத்து படத்தை உருவாக்கி உள்ளனர். இதில் விக்ரம் ஆதிவாசியாக வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரமின் கெட்டப்பை பா. ரஞ்சித் சீக்ரெட்டாக வைக்கப் பார்க்கிறார்.

ஆனால் எப்படியோ விக்ரமின் தங்கலான் கெட்டப் சோசியல் மீடியாவில் கசிகிறது. மேலும் படத்தை குறித்த போஸ்டர்கள் வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது ஹாலிவுட் நடிகர் படத்தில் இணைந்திருக்கும் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு தங்கலான் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தை பற்ற வைக்கும் நெருப்பு போல் வைரலாக பரவுகிறது.

தங்கலான் படத்தில் இணைந்திருக்கும் ஹாலிவுட் பிரபலத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர்

new-poster-cinemapettai
thangalaan-movie-new-poster-cinemapettai

Also Read: பொன்னியின் செல்வன் 2 ரிலீசுக்கு வரும் பெரும் சிக்கல்.. படாதபாடு படும் ஜெயம் ரவி, விக்ரம்

Trending News