வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

17 மொழிகளில், 190 நாடுகளில் வெளிவந்த ஜகமே தந்திரம்.. தனுஷுக்கு தமிழில் வாழ்த்து கூறிய அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்

இந்திய அளவில் எதிர்பார்ப்பை கிழப்பி உள்ள ஜகமே தந்திரம் இன்று வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் 17 மொழிகளில் 190 நாடுகளில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் படத்தின் இயக்குனர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஹாலிவுட் படமான தி கிரே மேன் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அந்தப்படத்தை அந்தோணி மற்றும் ஜோரு சோ இயக்கி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே  அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் என் கேம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்கள்.

அந்தோனி மற்றும் ஜோ ரூசோ ஆகியோர் தனுஷுக்கு ‘சூப்பர் டா தம்பி’ என்று தமிழில் ட்விட்டரில் பதிவிட்டு அமர்க்களப்படுத்தி உள்ளனர்.

தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் போட்ட ட்விட்டர் பதிவிற்கு தனுஷ் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

dhanush-twit-reply
dhanush-twit-reply

Trending News