உலக பிரபலமான அர்னால்ட் நடிப்பில் வெளிவந்த பிரிடேட்டர் படத்தின் அட்ட காப்பியை 15 வருடங்களுக்கு முன்னதாகவே திரையில் கொண்டு வந்தவர் தான் இயக்குனர் வேலுபிரபாகரன்.
1995-ல் செல்வமணி தயாரிப்பில் அருண்பாண்டியன், ரோஜா, ராதாரவி போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் அசுரன். இந்த படம் பிரிடேட்டர் படத்தில் வரும் அதே கதாபாத்திரத்தை அப்படியே அசுரன் படத்திலும் கண்முன் நிறுத்தி இருப்பார்கள்.
மனிதர்களின் கண்களுக்குத் தெரியாத ஒரு வித்தியாசமான உருவம் இருப்பது போன்றும் கிராபிக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். அருண் பாண்டியன் இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்திருப்பார், நெப்போலியன் மற்றும் செந்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள்.
அர்னால்ட் நடிப்பில் வெளிவந்த படம் 1986-ல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் அப்போதே ஹாலிவுட் அளவிற்கு தமிழ் சினிமாவை கொண்டு போய்விட வேண்டும் என்று போராடி அதில் வெற்றியும் கண்டார்.

ஏனென்றால் இந்த படம் அப்போதைய பாக்ஸ் ஆபீஸ் ஹிட் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஹீரோ அருண் பாண்டியன் தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர். அதுமட்டுமில்லாமல் தற்போது அயங்கரன் இன்டர்நேஷனல் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
முழு படம் பார்க்க: Click here