தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் தான் அந்த பிரபலம். இவர் தனது நடிப்பையும் தாண்டி டப்பிங் மூலமும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் அவர் யார்? யார் யாருக்கு குரல் கொடுத்துள்ளார்? என்பதை பார்ப்போம்.
பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் எம் எஸ் பாஸ்கர். இவர் நடிப்பில் வெளியான மொழி, சிவகாசி மற்றும் டிமான்டி காலனி ஆகிய படங்கள் இன்றும் ரசிகர் மத்தியில் இவரது நடிப்பு பேசப்பட்டு வருகிறது.
இவரது நடிப்பை பார்த்து கமல்ஹாசனே என்னுள் பாதிதான் எம்எஸ் பாஸ்கர் என கூறினார். அதைக்கேட்ட எம் எஸ் பாஸ்கர் அந்த ஒரு நொடியிலேயே கண்கலங்கி விட்டார். அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களையும் கவர்ந்துள்ளார் எம்எஸ் பாஸ்கர்.
எம் எஸ் பாஸ்கர் ஒரு சிறந்த நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அதே போல் மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
ஜுராசிக் பார்க் போன்ற பல ஹாலிவுட் படங்களுக்கு எம் எஸ் பாஸ்கர் தான் தமிழில் டப்பிங் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் பிரபல காமெடி நடிகரான பிரேமானந்தாவிற்கு தமிழில் எம்எஸ் பாஸ்கர் தான் டப்பிங்.
இவ்வளவு ஏன் தமிழ்நாட்டில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் அஜித்திற்கு ஆரம்பகாலத்தில் விளம்பர படங்களில் எம்எஸ் பாஸ்கர் தான் டப்பிங் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.