Ajith: நேற்று விடாமுயற்சி படத்திலிருந்து அஜித்தின் போட்டோக்கள் வெளியானது. யாரும் எதிர்பாராத விதத்தில் இருக்கும் அஜித்தின் புது தோற்றம் இப்போது ட்ரெண்டாகி வருகிறது.
கருப்பு நிற கோட் சூட்டில் ஸ்லிம்மாக இருக்கும் இந்த அஜித்தை காண தான் ரசிகர்கள் காத்திருந்தனர். அதேபோல் த்ரிஷாவின் கைபிடித்தபடி இருக்கும் ரொமான்டிக் போட்டோவும் வேற லெவலில் இருக்கிறது.
ஆனால் இந்தியன் ஜேம்ஸ் பாண்ட் போல் இருக்கும் அஜித் தான் அனைவரையும் கவர்ந்து விட்டார். அதை இப்போது ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.
அதேபோல் இணையத்தில் மற்றொரு செய்தியும் தீயாக பரவி வருகிறது. அதாவது அஜித்தின் இந்த தோற்றம் அச்சு அசல் ஜேம்ஸ் பாண்ட் போல் இருக்கிறது.
ஜேம்ஸ் பாண்ட் லுக்கில் மாஸ் காட்டும் அஜித்
ஒருவேளை ஹாலிவுட் பக்கம் அவர் போகப் போகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் ரசிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ஹீரோவாக அஜித்தை முடிவு செய்துவிட்டார்கள்.
அதனால் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் இவர்தான் என செய்தியை வெளியிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் ஒருவேளை இது மட்டும் நடந்து விட்டால் பாடி டபுள் செய்ய வேண்டிய வேலை மிச்சம்.
அதேபோல் பைக் கார் சாகசங்களையும் அஜித்தே கலக்கி விடுவார். ஒரே கல்லில் நிறைய மாங்காய் அடிக்கும் வாய்ப்பு ஜேம்ஸ் பாண்ட் தயாரிப்பாளர்களுக்கு கிடைத்திருக்கிறது.
அதனால் விரைவில் அஜித்துடன் அவர்களின் சந்திப்பு இருக்கும் எனவும் கூறுகின்றனர். எது எப்படியோ அஜித்தின் நியூ லுக் அவரை இன்னும் ஸ்டைலாக காட்டுகிறது என்பது மட்டும் உண்மை.