வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

குடும்ப குத்து விளக்காக இருந்து கவர்ச்சிக்கு மாறிய 7 நடிகைகள்.. எல்லாம் பணம் படுத்துறப்பாடு

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமாகி, ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு வாய்ப்பிற்காக கவர்ச்சி வேடங்களுக்கு மாறிய நடிகைகள் பற்றி பார்க்கலாம்.

மீனா: சமீபத்தில் கணவரை இழந்த மீனா, ஆரம்பத்தில் புடவை கட்ட மட்டுமே பிறந்தது போல பல படங்களில் புடவை உடுத்தி மட்டுமே நடித்தார். எஜமான், என் ராசாவின் மனசிலே போன்ற படங்கள் அவருக்கு பெண் ரசிகர்களை ஏராளமாக பெற்று தந்தது. ஆனால் காலப்போக்கில் வாய்ப்புகள் குறையாமல் இருக்க கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார். ரம்பா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில், நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் படு கவர்ச்சியான ஆட்டம் போட்டிருப்பார். அதற்கு பிறகு பல திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்தார். உதாரணத்திற்கு அவ்வை ஷண்முகி, இவன் போன்ற படங்களை கூறலாம்.

ரீமாசென்: மின்னலே படத்தை பார்த்தவர்கள் யாருக்கும் ரீமா சென் போலத்தான் காதலிக்க பெண் வேண்டும் என்கிற எண்ணம் வந்திருக்கும். அந்த அளவுக்கு நவ நாகரிகமாக நடித்திருந்தார். ஆனால் அடுத்த படமான தூள் படத்திலேயே பிட்டு பட நடிகை போல டூ பீஸ் உடையில் தான் அந்த படம் முழுக்க நடித்திருப்பார். அந்த ரீமா தானா இந்த ரீமா ? என்கிற அளவுக்கு அவரது ரசிகர்கள் நொந்து போனார்கள்! அதன் பிறகு அவரது கவர்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தார்கள் என்பது வேறு விஷயம்.

நயன்தாரா: தற்போது லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, முதல் படமான ஐயாவில் இழுத்து போர்த்தி நடித்திருந்தார். அதுவும் பரம சாது போல நடித்திருந்தார். அதோடு சந்திரமுகி படத்திலும் அவருக்கு குடும்பப்பாங்கான கதை வேண்டாம். அதனால் நல்லதொரு அபிப்ராயம் உண்டானது. ஆனால் அவர் நடித்த வல்லவன், பில்லா படங்களுக்கு பிறகு அவர் மேல் இருந்த குடும்ப குத்துவிளக்கு இமேஜ் மாறி, கவர்ச்சி நாயகி பட்டமே நிலைத்து நின்றது

அஞ்சலி: அஞ்சலி நடித்த ஆரம்பகால திரைபடடங்களான அங்காடி தெரு, கற்றது தமிழ் போன்ற படங்களை பார்த்த போது, அவர் மீது அன்பும் கருணையும் தான் பிறக்கும். அவரது நடிப்பிற்கு ஒரு ரசிகர் வட்டம் உருவாகிக்கொண்டு இருந்தது. ஆனால் இது நமக்கான ரூட்டு இல்லை என்று உணர்ந்தவர், கவர்ச்சி வேடங்களை அனாவசியமாக செய்ய தொடங்கினார். கலகலப்பு, சேட்டை போன்ற படங்களில் பலான பட நடிகைகளே தோற்கும் அளவிற்கு கவர்ச்சியை அல்லி இறைத்தார். போதாத குறைக்கு சிங்கம் 2-வில் குத்துப்பாட்டுக்கு நடனம் வேறு!

கீர்த்தி சுரேஷ்: என்ன நடந்தாலும் கவர்ச்சி மட்டும் காட்டமாட்டேன் என்று மலையாளம், தமிழ் சினிமாவில் வலம்வந்தார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் சாவித்திரியின் வாழ்க்கைப் படத்தில் நடித்தபோது கூட, நல்லதொரு பேரை தான் சம்பாதித்தார். ஆனால் தெலுங்கில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் நிச்சயம் கவர்ச்சி காட்டியே ஆகவேண்டும் என்பதை புரிந்துகொண்டவர் சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் நடித்த சர்க்காரு வாரி பாட்டா படத்தில் கவர்ச்சியில் பங்கம் செய்திருந்தார். இனி தெலுங்கில் முன்னணி இடத்திற்கு சீக்கிரம் வந்துவிடுவார் என்று கூறுகிறார்கள்.

நஸ்ரியா: தமிழில் ராஜாராணி, நேரம் படத்தில் பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் நஸ்ரியா, தமிழில் நடிக்கும்போது எனது தொப்புளை படம் பிடித்துவிட்டார்கள் என்று போர்க்கொடி தூக்கினார். அவ்வளவு குடும்ப குத்துவிளக்கான அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக்கொண்டார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான அண்ட்டே சுந்தரனிக்கி திரைப்படத்தில் நானியுடன் நடித்திருந்தார். இந்த படத்தில் இடுப்பு தெரிய, ஸ்லீவ்லெஸ் என்று கவர்ச்சி கோதாவில் இறங்கிவிட்டார்.

யாஷிகா ஆனந்த்: துருவங்கள் 16 படத்தில் யாஷிகா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் கவர்ச்சி காட்டாமல் நகரத்து மங்கை கதாபாத்திரம். சில நிமிடங்கள் மட்டுமே வருவார். யாரும் அவரை தற்போது இருக்கும் கவர்ச்சி புயலாக எண்ணிப்பார்த்து இருக்க மாட்டார்கள். தன்னுடைய பெரிய மனசை வைத்து பல இளம் நெஞ்சங்களை கெடுத்துக்கொண்டு இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவர் போடும் புகைப்படங்களுக்காக தவம் கிடக்கிறார்கள் அவரை பின்தொடர்பவர்கள்.

Trending News