சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்ட விக்கி, நயன்.. காண்டான சிம்பு ரசிகர்கள்!

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. நயன்தாரா திருமணத்தில் சிவப்பு நிற புடவையில் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக காட்சி அளித்திருந்தார். இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதி சென்றிருந்தனர்.

இந்நிலையில் நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவுக்கும் சென்று வந்தனர். தற்போது இந்த புதுமண ஜோடி ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளனர். தாய்லாந்தில் பிரபல ஹோட்டலின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார்.

இதனால் தாய்லாந்தில் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஹனிமூன் கொண்டாடுகிறார்கள் என்ற தகவல் கசிந்தது. தற்போது விக்னேஷ் சிவனின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Nayanthara

நயன்தாரா கழுத்தில் தாலியுடன் மஞ்சள் கவுனில் அழகாக நடந்து போவது போன்ற புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார். மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாரா இடம் மண்டியிட்ட நிற்பது போன்ற புகைப்படமும், மேலும் சில ரொமான்டிக் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

Nayanthara

கோலிவுட், பாலிவுட் என நயன்தாரா படு பிஸியாக இருக்கும் நேரத்திலும் திருமணத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன் உடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் இவர்களுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Nayanthara-Vignesh Shivan

ஆனால் மறுபக்கம் இந்த புகைப்படத்தை பார்த்து சிம்பு ரசிகர்கள் மிக கடுப்பில் உள்ளனர். நயன்தாராவுடன் தலைவன் சிம்பு இருக்க வேண்டிய இடத்தில் விக்னேஷ் சிவன் இருக்கிறார் என்று காண்டாகி கமெண்டுகளை தெரிக்கவிட்ட வருகின்றனர். மேலும் சிம்பு தற்போது வரை சிங்கிள் ஆகவே இருக்கிறார் என்ற கவலையிலும் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

Nayanthara-Vignesh Shivan
Nayanthara-Vignesh Shivan

Trending News