Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அன்புவின் பேச்சை ஆனந்தி கேட்காததால் தற்போது இரண்டு பேருக்குமே பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
ஒரு பக்கம் ஆனந்தி தன்னை ஏற்க மறுத்ததால் மகேஷ் பைத்தியம் போல் ஆகிவிட்டான். இன்னொரு பக்கம் அன்பு நட்பு மற்றும் காதலுக்கு இடையே சிக்கிக் கொண்டு தவிக்கிறான்.
தன்னுடைய காதல் கைகூடிய சந்தோஷம் அன்பு மற்றும் ஆனந்திக்கு இல்லாமலேயே போய்விட்டது.
அன்பு மற்றும் ஆனந்தியின் காதல் பற்றி யார் சொன்னால் மகேஷ் ஏற்றுக்கொள்வான் என்பது எல்லோருக்குமே பெரிய கேள்வியாக இருந்தது.
தற்போது இந்த மொத்த சூழ்நிலையையும் மாற்றும் சக்தி ஹாஸ்டல் வார்டனுக்கு மட்டுமே இருக்கிறது.
அன்பு, ஆனந்தி காதலை புரட்டி போடும் வார்டன்
ஹாஸ்டல் வார்டன் மகேஷ் மீது காட்டும் பாசம் மற்றும் அவர் பின்னால் இருக்கும் ஃப்ளாஷ்பேக் தான் அன்பு மற்றும் ஆனந்தியின் காதலை புரட்டிப் போட இருக்கிறது.
இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் வார்டன் ஆனந்தியிடம் எதனால் நீ மகேஷின் காதலை ஏற்கவில்லை என்று கேட்கிறார்.
அதற்கு ஆனந்தி அவரை நான் குடும்பத்தில் ஒருவராகத் தான் பார்க்கிறேன், என் வாழ்க்கையில் ஒருவராக பார்க்கவில்லை என்று சொல்கிறாள்.
இந்த விஷயத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை இதன் பின்னால் வேறு ஒரு காரணம் இருக்கிறது என வார்டன் சொல்கிறார்.
ஆனந்தி வார்டனிடம் எல்லா உண்மையையும் சொல்வது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
அன்பு மற்றும் ஆனந்தியின் காதலை தெரிந்து கொள்ளும் வார்டன் அவர்களுக்கு எப்படி உதவுகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.